2020 வரையிலான பத்தாண்டுகளில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 134.6 பில்லியன் டாலர்களை சீனா அறிவித்துள்ளது. இது இந்தியா வழங்கியதை விட கிட்டத்தட்ட 11 மடங்கு அதிகம்.
இந்தியாவிடம் இருந்து கடன் பெறும் இரண்டாவது பெரிய நாடாக ஆப்பிரிக்கா மாறியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா வழங்கிய மொத்தக் கடன்களில் சுமார் 32 பில்லியன் டாலர் அல்லது 38 சதவீதத்தை நாற்பத்திரண்டு ஆப்பிரிக்க நாடுகள் பெற்றுள்ள என இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் நிர்வாக இயக்குனர் ஹர்ஷா பங்கரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த வங்கி இந்தியாவின் பொருளாதார இராஜதந்திரத்தின் ஒரு கருவியாகும். மேலும் தெற்காசிய நாடு ஆப்பிரிக்கா முழுவதும் 195 திட்ட அடிப்படையிலான 12 பில்லியன் டாலர் கடன்களைத் அளித்துள்ளது. இது அதன் சொந்த பிராந்தியத்தில் உள்ள எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
சுகாதாரப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட திட்டங்களுக்காக கொடுக்கப்பட்ட கடன் தொகைகளை ஆப்பிரிக்கா நன்றாகப் பயன்படுத்தியுள்ளது. மேலும் கடன் உதவி பெறுவதன் தேவை அதிகரித்துள்ளதையும் காண முடிகிறது என்று ஹர்ஷா பங்கரி சொல்கிறார்.
மணிப்பூரில் ஆயுதங்களை கொள்ளையடிக்க முயன்ற கும்பல்; துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டிய போலீஸ்
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுடன் தொடர்பு கொள்வதில் இந்தியா சமீபத்தில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளபோதிலும், அங்கு வலுவாகக் கால் பதிப்பதில் பணக்கார அண்டை நாடுகளைவிட பின்தங்கியேே உள்ளது. 2016ல் இருந்து ஆப்பிரிக்காவுக்கான சீனாவின் கடன்கள் குறைந்துள்ளன. 2020 வரையிலான பத்தாண்டுகளில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 134.6 பில்லியன் டாலர்களை சீனா அறிவித்துள்ளது என பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய வளர்ச்சிக் கொள்கை மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது இந்தியா வழங்கியதை விட கிட்டத்தட்ட 11 மடங்கு அதிகம்.
ஆப்பிரிக்காவில் உள்ள கனிம வளங்களை பயன்படுத்திக்கொள்ள சீனாவும் ஆரம்ப நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மின்சார வாகனங்களில் பயன்படும் முக்கிய உலோகமான லித்தியத்தைப் பெற முயற்சி செய்கிறது.
எவ்வாறாயினும், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, ஆப்பிரிக்க நாடுகளுடன் பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், திறக்கப்பட்ட 25 புதிய இந்தியத் தூதரகங்களில் 18 ஆப்பிரிக்காவில் திறக்கப்பட்டன. பிப்ரவரியில், இந்தியா 48 ஆப்பிரிக்க நாடுகளுடன் வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சிமாநாட்டை நடத்தியது.
செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமனம்
ஜூன் 28 அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு உரையில், "இப்போதிலிருந்து 25 ஆண்டுகள் முன்னோக்கி சிந்திக்க முயற்சிக்கிறோம்" என்று கூறினார். மேலும், "2047 இல் நாம் எங்கே இருக்கவேண்டுமோ, அதற்குத் தயாராக இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறோம்" என்றும் தெரிவித்தார்.
சீனாவின் நிதியுதவி இந்தியாவை விட பெரியது, ஆனால், "ஆப்பிரிக்காவில் இந்தியா ஆதரித்த திட்டங்களைப் பார்த்தால், அவை அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கு நிறைய நன்மைகளைத் தருவதை காணலாம்" என்று ஹர்ஷா பங்கரி சுட்டிக்காட்டுகிறார்.
அனைத்து கிளைகளிலும் மகிளா சம்மான் கணக்கு தொடங்கலாம்! பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு