பேங்க் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் உள்ள எல்லா கிளைகளிலும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) கணக்கு திறக்கும் வசதியை வழங்குகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா (BoI) நாடு முழுவதும் உள்ள அதன் அனைத்து கிளைகளிலும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) கணக்கு திறக்கும் வசதியை வழங்கும் முதல் வங்கியாக மாறியுள்ளது. இதனை செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தைத் தொடங்குவது குறித்துப் பேசிய பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரஜ்னீஷ் கர்னாடக், பாங்க் ஆஃப் இந்தியா தனது அனைத்து கிளைகளிலும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தைச் செயல்படுத்தும் முதல் வங்கியாகும். இதன் மூலம் அனைத்து கிளைகளிலும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ், 2023 இன் கீழ் கணக்குகளைத் திறக்க முடியும்.
தமிழ்நாடு முழுவதும் 200 நாள் பாத யாத்திரை செல்லும் அண்ணாமலை!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2023 அன்று 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் போது இந்தத் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் கணக்கைத் திறக்கலாம். மைனர் பெண்ணின் சார்பாக அவரது பாதுகாவலரும் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்யவேண்டும். ரூ.100 இன் மடங்குகளில் எந்தத் தொகையும் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.2,00,000 வரை டெபாசிட் செய்யலாம். ஒரு கணக்கு தொடங்கி மூன்று மாத இடைவெளிக்குப் பின் மற்றொரு கணக்கு தொடங்கலாம். இவ்வாறு 3 மாதங்களுக்கு ஒரு முறை பல கணக்குகளைத் திறக்கலாம். ஆனால், மொத்தம் ரூ.2,00,000 என்ற அதிகபட்ச வரம்பிற்கு உட்பட்டு இருக்கவேண்டும்.
விடிய விடிய பெய்த மழை! வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும். காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போதுள்ள வருமான வரி விதிகளின்படி மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழின் கீழ் வரும் வருமானத்துக்கும் வரி விதிக்கப்படும். ஆனால், டிடிஎஸ் கழிக்கப்படாது.
இந்தக் கணக்கு, தொடங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும். மார்ச் 31, 2025 வரை மகிளா சம்மான் திட்டத்தின் கீழ் கணக்குகளைத் திறக்கலாம்.
மணிப்பூரில் ஆயுதங்களை கொள்ளையடிக்க முயன்ற கும்பல்; துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டிய போலீஸ்