நடப்பாண்டின் உலகப் பொருளாதாரத்தை இந்தியாவும், சீனாவும் ஆக்ரமிக்கும்: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!!

By Dhanalakshmi G  |  First Published Apr 7, 2023, 10:32 AM IST

நடப்பாண்டில் உலகப் பொருளாதாரம் மூன்று சதவீதம் அளவிற்கு மட்டுமே வளர்ச்சி அடையும் என்றும் உலகப் பொருளாதரத்தில் பாதியளவு வளர்ச்சியை இந்தியாவும், சீனாவும் தன்னகத்தே கொண்டு இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண்மை இயக்குனர் கிறிஸ்தலினா கூறுகையில், ''கடந்தாண்டு உலகப் பொருளாதாரத்தில் சிறிய சரிவு இருந்தது. இதற்குக் காரணம் உலகளவில் நிலவிய தொற்று நோய் பாதிப்பு மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்த போர் ஆகியவை காரணங்களாக இருந்தன. நடப்பாண்டிலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடிக்கும் என்றே கருதப்படுகிறது.

கடந்தாண்டில் உலகப் பொருளாதாரம் 3.4 சதவீதத்தில் இருந்து குறைந்தது. இதனால், பசி, வறுமை அதிகளவில் தலைதூக்கி இருந்தது. 

Latest Videos

undefined

மேலும், கிரிஸ்தலினா ஜியார்ஜிவா கூறுகையில், ''குறைந்த அளவிலான பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் வளர்ச்சி 3 சதவிகிதமாக நீடிக்கும். 1990 ஆண்டுக்குப் பின்னர் இது நம்முடைய மிகக் குறைந்த நடுத்தர கால வளர்ச்சிக்கான முன்னறிவிபாகும். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக 3.8 சதவிகிதத்திற்கும் குறைவான வளர்ச்சியாக இருக்கப் போகிறது.

Gold Rate Today : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

"வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் சில நாடுகளில் வேகமும் உள்ளது. குறிப்பாக ஆசியா ஒரு பிரகாசமான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ளது. நடப்பு 2023 ஆம் ஆண்டில், உலக வளர்ச்சியில் பாதியை இந்தியாவும் சீனாவும் ஆக்ரமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகள் ஒரே மாதிரியான வளர்ச்சியில் இருந்து கொண்டுள்ளன. வளர்ச்சிக்கான அறிகுறி இல்லை.

குறைந்த வளர்ச்சியானது கடுமையான அடிதட்டு மக்களை பாதிக்கும். இது குறைந்த வருமானம் உள்ள நாடுகளை மேலும் பாதிக்கும். வறுமை மற்றும் பசி மேலும் அதிகரிக்கக்கூடும். இது கோவிட் தொற்று நெருக்கடியால் நீடித்த ஒரு ஆபத்தான போக்காகும். வளர்ச்சியடைந்த பொருளாதாரங்களை கொண்டு இருக்கும் 90 சதவீத நாடுகளில் சரிவு காணப்படும். " என்று தெரிவித்துள்ளார். 

2021 ஆம் ஆண்டில் வலுவான மீட்புக்குப் பிறகு, உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்த போர் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால், 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி கிட்டத்தட்ட பாதியாக குறைந்தது. அதாவது 6.1 சதவீதம் முதல் 3.4 சதவிகிதமாக குறைந்தது. 

RBI monetary policy committee meet 2023-24: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசரவ் வங்கி அறிவிப்பு

click me!