தனிநபர் கடன் முதல் சிறு தொழில் கடன் வரை.. மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரம்

Published : Apr 05, 2023, 10:04 PM IST
தனிநபர் கடன் முதல் சிறு தொழில் கடன் வரை.. மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரம்

சுருக்கம்

தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் குறித்த அறிவிப்பை காணலாம்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

மேற்படி திட்டத்தினை சிறுபான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெற்று வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் வகையில் கடன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 19. 04. 2023 அன்றும், கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 20. 04. 2023 அன்றும், திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்தில் 21. 04. 2023 அன்றும், விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் 26. 04. 2023 அன்றும், கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  27. 04. 2023 அன்றும், தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் 28. 04. 2023 அன்றும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மேற்படி சிறப்பு முகாம்களில் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிட சான்று, ஆதார் அட்டை நகல், தொழில் திட்ட அறிக்கை, கூட்டுறவு வங்கி புத்தக நகல் மற்றும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ் (Bonafide) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்.

இதையும் படிங்க..17 வயது சிறுமி.. ஒருதலைக்காதல்.. கடைசியில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு