
சிவகங்கை அருகே அரசு பேருந்தும் ஜல்லி ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திருமாஞ்சோலை அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து சாலையை விட்டு விலகி வலதுபுறமாக இறங்கியது. இந்த விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க;- மெரினா பீச்சில் பானிபூரி சாப்பிட்ட இளம்பெண்.. ரயிலில் வாந்தி எடுத்து திடீர் மரணம்.. கதறிய துடித்த தோழிகள்..!
மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனே அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- அப்பாடா.. 10 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு 13 குழந்தைகள் பெற்றவருக்கு குடும்ப கட்டுப்பாடு..!
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.