கிஷான் விகாஸ் பத்ரா வட்டி விகிதம் உயர்வு - உங்கள் பணத்தை 115 மாதத்தில் இரட்டிப்பாக்குங்கள்.!!

By Raghupati RFirst Published Apr 3, 2023, 8:29 PM IST
Highlights

2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் கிஷான் விகாஸ் பத்ரா (KVP) வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

இந்திய தபால் அலுவலகத்தில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் கிஷான் விகாஸ் பத்ரா (KVP) வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, புதிய விகிதம் 7.5% ஆக இருக்கும், மேலும் கணக்கு இப்போது 115 மாதங்களில் முதிர்ச்சியடையும். அதாவது கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும். 

இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!

கிஷான் விகாஸ் பத்ராவின் முந்தைய விகிதம் 7.2% ஆக இருக்கும். கிஷான் விகாஸ் பத்ரா உடன், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா, அஞ்சல் அலுவலக நிலையான வைப்புத் திட்டம், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் மற்றும் அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டம் போன்ற சில சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களையும் அரசாங்கம் திருத்தியுள்ளது. 

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டு அடிப்படையில் அரசாங்கம் திருத்துகிறது. வட்டி விகிதங்களின் அடுத்த திருத்தம் ஜூன் 30, 2023க்குள் நடக்கும்.

இதையும் படிங்க..எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண்.. ஊக்கப்படுத்திய தமிழக அரசு !!

இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா

click me!