வளர்ச்சி 5.9 சதவீதம்... இந்தியா தான் வேகமாக வளரும் நாடு: சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு

By SG Balan  |  First Published Apr 12, 2023, 8:55 AM IST

வருகிற 2024-25 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்றும் உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா நீடிக்கும் எனவும் சர்வதேச செலாவணி நிதியம் கூறியுள்ளது.


சர்வதேச செலாவணி நிதியம் உலக நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான தனது முந்தைய கணிப்பை மாற்றியுள்ளது.

முன்னதாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள கணிப்பில் அதனை 0.2 சதவீதம் குறைத்து, 5.9 சதவீதமாக மாற்றி சர்வதேச செலாவணி நிதியம் அறிவித்துள்ளது. வளர்ச்சிக் கணிப்பைக் குறைத்திருந்தாலும், உலகிலேயே மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா நீடிக்கிறது என்றும் சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இறந்தவரின் வங்கிக் கணக்கில் ரூ.28 லட்சம் அபேஸ்! வழக்குப்பதிவு செய்ய மறுத்த போலீஸ்!

இதேபோல, அடுத்த நிதி ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்புகளையும் குறைத்துக்கொண்டிருக்கிறது. அடுத்த 2024-25 நிதியாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. முந்தைய கணிப்பான 6.8 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதம் குறைத்திருக்கிறது. இந்தியாவின் பணவீக்க விகிதம் நடப்பு ஆண்டில் 4.9 ஆக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டில் அது 4.4 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செலாவணி நிதியத்தின் கணிப்பில் இந்தியாவின் வளர்ச்சி 5.9 சதவீதம் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி தனது கணிப்பில் நாட்டின் நடப்பு நிதியாண்டு வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டில் 3 சதவீதமாக இருந்த சீனாவின் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதி ஆண்டில் 5.2 சதவீதமாக இருக்கும் என்றும் 2024ஆம் ஆண்டில் இது 4.5 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 2.8% ஆகவும், 2024ஆம் ஆண்டில் 3% ஆகவும் இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.

பாஜகவில் இருந்து விலகினார் லட்சுமண் சுவதி; தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிருப்தி

click me!