SPG Commando:பிரதமர் மோடி-க்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பிரிவுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை எவ்வளவு?

By Pothy Raj  |  First Published Feb 4, 2023, 11:26 AM IST

SPG Commando:பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவுக்கு நடப்பு ஆண்டை விட அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


SPG Commando: பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவுக்கு நடப்பு ஆண்டை விட அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்து கடைசியாகத் தாக்கல் செய்த முழு பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால், இடைக்கால பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்ய முடியும். 

Tap to resize

Latest Videos

இந்த பட்ஜெட்டில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.96 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் பெரும்பகுதி, மத்திய ஆயுதப்படை போலீஸ் பிரிவு, உளவுத்துறைக்கு செலவிடப்படுகிறது.

‘எம்எல்ஏ-தான் தேவை, விற்பனையாளர் அல்ல’: மேகாலயா சட்டசபைத் தேர்தலில் இலவசங்களை மறுத்த மூதாட்டி

நடப்பு நதியாண்டு பட்ஜெட்டில் உள்துறைக்கு ரூ.ஒரு லட்சத்து 85ஆயிரத்து 776.5 கோடி ஒதுக்கப்பட்டது. 2023-24ம் ஆண்டுபட்ஜெட்டில் உள்துறைக்கு ஒரு லட்சத்து 96ஆயிரத்து 34 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.10ஆயிரம் கோடிக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய ஆயுதப்படை போலீஸ்(CAPF) பிரிவுக்கு மட்டும் ரூ.1,27,756.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.1,19,070.36 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. 

உள்நாட்டுப் பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டை, ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் சிஆர்பிஎப்(CRPF) பிரிவுக்கு ரூ.31,772.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.31,495 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் மற்றும்வங்கதேசத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படைக்கு பட்ஜெட்டில் ரூ.24,771 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டில் ரூ.23,557 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. 

விமானநிலையங்கள், மெட்ரோ ரயில்நிலையங்கள், அணு உலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்திய தொழிற்படை பிரிவுக்கு பட்ஜெட்டில் ரூ.13,214 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.12,293 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இந்திய எல்லை மற்றும் நேபாள், பூடான் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் ஷாஷ்த்ரா சீமா பால்(SSB) பிரிவுக்கு ரூ.8,329 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் ரூ.8,019 கோடிஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தோ-திபெத் எல்லை போலீஸ்(ITBP) பிரிவுகு பட்ஜெட்டில் ரூ,8,096 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, நடப்பு பட்ஜெட்டில் ரூ.7,626 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்திய-மியான்மர் எல்லை மற்றும் வடகிழக்குப் பகுதியில் பாதுகாப்பில் இருக்கும் அசாம் ரைபிள் பிரிவுக்கு பட்ஜெட்டில் ரூ.7,052 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.6,561.33 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

நாட்டில் ஏதேனும் அவசரச் சூழலை கையாளும் தேசிய பாதுகாப்பு பிரிவுக்கு பட்ஜெட்டில் ரூ.1,286 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, நடப்பு பட்ஜெட்டில் ரூ.1,183 கோடி ஒதுக்கப்பட்டது. உளவுத்துறைக்கு நடப்புஆண்டில் ரூ.3,022 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் பட்ஜெட்டில் ரூ.3,418 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு பிரிவுக்கு பட்ஜெட்டில் ரூ,433.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.411.88 கோடி ஒதுக்கப்பட்டது.டெல்லி போலீஸாருக்கு ரூ.11,662 கோடியும், எல்லைப்பகுதயில் சாலை அமைக்கவும், பாலங்கள் அமைக்கவும் ரூ.3,545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்றுமே இல்லாத பட்ஜெட்! தொழில் வர்த்தக சபை கடும் அதிருப்தி

போலீஸ் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ,3,636கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் ரூ.2,188 கோடி மட்டுமேஒதுக்கப்பட்டது. நாட்டின் போலீஸ் பிரிவை நவீனப்படுத்த ரூ.3,750 கோடியும், பாதுகாப்பு செலவினங்களுக்காக ரூ.2,780 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ரூ.1,564 கோடியும், மகளிர் பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.1,100 கோடியும், தடயவியல் பிரிவுக்கு ரூ.350 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

click me!