அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தை அமெரிக்கப் பங்குச்சந்தையிலிருந்து நீக்குகிறது டோவ் ஜோன்ஸ்(S&P Dow Jones)

By Pothy RajFirst Published Feb 4, 2023, 9:57 AM IST
Highlights

S&P Dow Jone: அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து, கெளதம் அதானிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் வருகின்றன. அமெரிக்கப் பங்குச்சந்தை நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தை நீக்க இருப்பதாக எஸ்அன்ட்பி டோவ் ஜோன்ஸ் (S&P Dow Jones) நிறுவனம் தெரிவித்துள்ளது.

S&P Dow Jone:அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து, கெளதம் அதானிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் வருகின்றன. அமெரிக்கப் பங்குச்சந்தை நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தை நீக்க இருப்பதாக எஸ்அன்ட்பி டோவ் ஜோன்ஸ் (S&P Dow Jones) நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் 7ம் தேதி முதல் அதானி அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தை அமெரிக்க பங்குச்சந்தையில் நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கப்படும் என்று ஸ்டான்டர்ட் அன்ட் பூர்ஸ் டோவ்ஜோன்ஸ் நிறுவனம்(S&P Dow Jones) தெரிவித்துள்ளது.

அதானி நிலைமை இப்படியா ஆகணும்! பாதி சொத்தைக் காணோம்! டாப்-20யிலிருந்து துடைத்து எறியப்பட்டார்

ஏற்கெனவே அதானி குழுமத்தின் நிறுவனங்களான அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றை தேசியப் பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தை குறியீட்டில் இருந்து அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் நீக்கப்பட உள்ளது. 

பங்குவிலையில் கடும் ஏற்ற இறக்கம், முதலீட்டாளர்கள் நலன், விலை, விலைமாறுபாடு உள்ளிட்ட காரணங்களை வைத்து ஒருநிறுவனத்தின் பங்குகளை என்எஸ்இ(NSE), பிஎஸ்இ(BSE) கண்காணிப்பில் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் அதானியின் அசுர வளர்ச்சியும் அதள பாதாள வீழ்ச்சியும்

தற்போது என்எஸ்இ, பிஎஸ்இ அதானி நிறுவனப் பங்குகளை நேரடிக் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளதன் மூலம் ஊக வாணிபம் செய்தல், குறுகிய நோக்கில் பங்குகளை விற்றலில் ஈடுபட முடியாது. 

பங்குச்சந்தையில் அதானி குழும நிறுவனங்கள் செய்த மோசடிகள், தில்லுமுல்லுகள் குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இதுவரை அதானி குழுமத்துக்கு ரூ.10லட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, அமெரிக்கப் பங்குச்சந்தை குறியீட்டு நிறுவனமாந ஸ்டான்டர்ஸ் அனஅட் பூர்ஸ் டோவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை குறியீட்டில் இருந்து அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தை வரும் 7ம் தேதி முதல் நீக்க இருப்பதாக நேற்று அறிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், மோசடிகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள், முதலீட்டாளர்களின் கவலைகள்,அச்சங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுப்பதாக டோவ் ஜோன்ஸ் தெரிவித்துள்ளது.

இப்படியா ஷாக் கொடுப்பது!அதானி குழுமம் நிதிநிலை குறித்து மூடிஸ் நிறுவனம் ஆய்வு

ஆனால், அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் நேற்று பிற்பகலுக்குப் பின் இந்தியப் பங்குசந்தையில் உயர்ந்தன. காலை வர்த்தகத்தில் 20% சரிந்தது. கடந்த 6 வர்த்தக தினங்களில் அதானி குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.8.76 லட்சம் சரிந்துள்ளது.

அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் கடந்த மாதம் இறுதியில் பொதுப்பங்கு வெளியிட்டிருந்தது(FPO) ஆனால், பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற சூழல் காரணமாக எப்பிஓவை திடீரென ரத்து செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்குவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் மேலும் அடிவாங்கியது குறிப்பிடத்தக்கது.
 

click me!