Stock Market:பங்குச்சந்தை| சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு, நிப்டி ஏற்றம்! சரிவிலிருந்து மீண்ட அதானி பங்குகள்

By Pothy RajFirst Published Feb 3, 2023, 4:11 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தன. அதானி குழும பங்குகள் சரிவிலிருந்து மீண்டன

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தன. அதானி குழும பங்குகள் சரிவிலிருந்து மீண்டன

இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து 5வது நாளாக உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. பங்குச்சந்தையில் 5 நாட்களும் கடும் ஊசலாட்டம் நிலவியபோதிலும் வர்த்தகம் ஏற்றத்துடனே முடிந்துள்ளன.

அதானி குழுமத்தின் பங்குகள் சரிவால் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள பொதுத்துறை நிறுவனங்களின் நிலை குறித்து முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர். ஆனால், எஸ்பிஐ லைப், எச்டிஎப்சி லைப் ஆகிய நிறுவனங்களின் விளக்கத்தால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்தனர். 

அதானி குழுமப் பத்திரங்கள் ‘ஜீரோவா’ மதிப்பில்லையா? கிரெடிட் சூசி வாங்குவதை நிறுத்தியது

அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் இன்று காலை மேலும் சரிவைச் சந்தித்தன. ஒட்டுமொத்தமாக கடந்த 7 நாட்களில் அதானி குழுமம் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடி குறைந்துவிட்டது. இதில் அதானி குழுமத்தில் உள்ள அதானி போர்ட்ஸ், அம்புஜா நிறுவனங்களை என்எஸ்இ கண்காணிப்பில் கொண்டுவந்ததும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின.

ஆனால் ரேட்டிங் ஏஜென்சிகள், அதானி குழுமம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் திறன் குறைந்துவிட்டதாகக் கணிக்கவில்லை, நாங்கள் அதானி குழுமத்தின் மீது நம்பிக்கை வைக்கிறோம் எனத் தெரிவித்தன. 

ரேட்டிங் ஏஜென்சியின் இந்த வார்த்தைக்குப்பின் அதானி குழுமத்தின் பங்குகள் சரிவிலிருந்து மீளத் தொடங்கின. அதானி என்டர்பிரைசர்ஸ் பங்கு இன்று மிகவும் குறைவாக 1,017 ரூபாய்க்கு சரிந்தநிலையில், மாலை வர்த்தகம் முடிவில் 1530ரூபாய்க்கு உயர்ந்தது. அதானி போர்ட்ஸ் பங்கு மதிப்பு ரூ.395லிருந்து ரூ.486க்கு உயர்ந்தது.

அதானி குழுமத்துக்கு எவ்வளவு கடன் கொடுத்தீங்க! வங்கிகளிடம் விளக்கம் கேட்கும் ஆர்பிஐ

இது தவிர சர்வதேச காரணிகளும் சாதகமாக இருந்தன. அமெரிக்கப் பங்குச்சந்தை உயர்வு, ஆசியப்  பங்குச்சந்தையில் ஏற்றமான போக்கும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தின. இது தவிர பல்வேறு நிறுவனங்களின் 3வது காலாண்டு முடிவுகளும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டியதால் உற்சாகமாக பங்குகளை வாங்கினர்.

காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு்சசந்தை மாலைவரை நீடித்தது. மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 909 புள்ளிகள் உயர்ந்து, 60,841 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 243 புள்ளிகள் அதிகரித்து, 17,854 புள்ளிகளில் ஏற்றத்துடன் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில் 3 நிறுவனங்களைத் தவிர மற்ற 27 நிறுவனங்களின் பங்குகளும் லாபத்தில் முடிந்தன. குறிப்பாக டெக்மகிந்திரா, விப்ரோ, எச்சிஎல் டெக் ஆகிய பங்குகள் விலை சரிந்தன

நிப்டியில் ஆட்டோமொபைல், வங்கி, எப்எம்சிஜி, கட்டுமானம், ஐடி, பொதுத்துறை வங்கிப்பங்குகள் லாபத்தில் முடிந்தன

click me!