Adani:அதானி நிலைமை இப்படியா ஆகணும்! பாதி சொத்தைக் காணோம்! டாப்-20யிலிருந்து துடைத்து எறியப்பட்டார்

By Pothy RajFirst Published Feb 3, 2023, 1:16 PM IST
Highlights

அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதையடுத்து, உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் டாப்-20 வரிசையிலிருந்து கெளதம் அதானி சரிந்துள்ளார்.

அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதையடுத்து, உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் டாப்-20 வரிசையிலிருந்து கெளதம் அதானி சரிந்துள்ளார்.

முதல் 20 வரிசையில்கூட இல்லாமல் சரிந்த கெளதம் அதானி, 22வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு ஏறக்குறைய ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு போன்றவற்றை, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த வாரம் வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின், அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு பங்குச்சந்தையில் மளமளவெனச் சரிந்து வருகிறது.

அதானி என்டர்பிரைசர்ஸ் FPO ரத்துக்கு காரணம் என்ன? மவுனம் கலைத்த கெளதம் அதானி

அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் ரூ.20ஆயிரம் கோடிக்கு எப்பிஓ வெளியிட்டிருந்து. பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், அந்த எப்பிஓ-வை அதானி குழுமம்திடீரென ரத்து செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கவும் முடிவு செய்தது.

இதனால் அதானி என்டர்பிரைசர்ஸ் பங்கு மதிப்பு 25 சதவீதத்துக்கும் மேலாகச் சரிந்தது, 7 நாட்களில் 66 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி க்ரீன்எனர்ஜி,அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பங்குகள் மதிப்பு ஏறக்குறைய 75 சதவீதம் வரை சரிந்து கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. 

அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி(12000 கோடி டாலர்) குறைந்துள்ளது என்று போர்ப்ஸ், ப்ளூம்பெர்க் இதழ்கள் தெரிவித்துள்ளன. 

அதானி என்டர்பிரைசஸ் FPO திடீர் வாபஸ்: முதலீட்டாளர்களிடம் பணத்தை திரும்ப அளிக்க முடிவு

கடந்த ஒரு வாரத்தில் அதானி குழுமத்துக்கு ஏற்பட்ட இழப்பால், கெளதம் அதானியின் சொத்து மதிப்பு பாதியாகக் குறைந்துவிட்டது. அதானியின் சொத்து மதிப்பு 61300 கோடி டாலராக இருந்தது.

ஆனால் அதானி என்டர்பிரைசர்ஸ் பங்கு மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதையடுத்து, தற்போது அதானி சொத்து மதிப்பு 58,380 கோடி டாலராகக் குறைந்துவிட்டது.சமீபத்தில் அதானி குழுமம் கைப்பற்றிய என்டிடிவி, ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகளின் மதிப்பும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. 

இதற்கிடையே அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதையடுத்து, ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிரெடிட் சுசி எனும் முதலீட்டு கடன் நிறுவனம் அதானி குழுமப் பங்கு பத்திரங்களை அடமானமாகப் பெற்று கடன் தரமுடியாது எனத் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்துக்கு எவ்வளவு கடன் கொடுத்தீங்க! வங்கிகளிடம் விளக்கம் கேட்கும் ஆர்பிஐ

அதானி குழுமத்தில் உள்ள 3 நிறுவனங்களை அதாவது அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றின் பங்குகளை கண்காணி்ப்பில் கொண்டுவர இருப்பதாக தேசியப் பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை முடிவு செய்துள்ளன.

click me!