வசூல் ராஜாவான ஜிஎஸ்டி; நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.50 லட்சம் கோடி தாண்டியது!!

By Dhanalakshmi G  |  First Published Feb 1, 2023, 10:59 AM IST

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஜனவரி மாதத்தில் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டி, நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.55 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
 


கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல் ரூ.1.38 லட்சம் கோடியாக இருந்ததால், மாதாந்திர வருவாய் ஆண்டு அடிப்படையில் 12% உயர்ந்துள்ளது. இதற்கிடையில், நடப்பு நிதியாண்டில் ஜனவரி 2023 வரையிலான வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 24% அதிகமாகும்.

ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூலானது, 2022 ஏப்ரல் மாதத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகபெரிய உயர்வாகும்.  கடந்த ஆண்டில் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில், சரக்கு இறக்குமதி மூலம் கிடைக்கும் வருவாய் 29% அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாயை விட 22% அதிகமாகவும் உள்ளன. 

Tap to resize

Latest Videos

Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்கள், முதியவர்களுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள்
மொத்த ஜிஎஸ்டி வசூலான ரூ.1.55 லட்சம் கோடியில், சிஜிஎஸ்டி ரூ.28,963 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ரூ.36,730 கோடியாகவும், ஐஜிஎஸ்டி ரூ.79,599 கோடியாகவும், செஸ் ரூ.10,630 கோடியாகவும் (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.768 கோடி உட்பட) உள்ளது.

click me!