Union Budget 2023:பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்!சூட்கேஸ் முதல் சிவப்பு ‘பஹி கட்டா’ வரை

By Pothy Raj  |  First Published Feb 1, 2023, 10:19 AM IST

மத்திய பட்ஜெட் 2023 : மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 5வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளர். இதற்காக பாரம்பரிய சிவப்பு நிற பஹி கட்டா துணியில் பட்ஜெட் டேப்ளட்டை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றம் புறப்பட்டுள்ளார்.


மத்திய பட்ஜெட் 2023 :  மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 5வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளர். இதற்காக பாரம்பரிய சிவப்பு நிற பஹி கட்டா துணியில் பட்ஜெட் டேப்ளட்டை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றம் புறப்பட்டுள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவைச் சந்திப்பார். அதன்பின் பிரதமர் மோடியைச் சந்திப்பார். இந்த நடைமுறைகளுக்கு முன் பாரம்பரியமாக ப்ரீப்கேஸ்-உடன் நிர்மலா சீதராமன் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊடகங்களைச் சந்திப்பார். ஆனால் டிஜிட்டல் பட்ஜெட் நடைமுறைக்கு வந்தபின் டேப்ளட் பிசி-உடன் நிர்மலா சந்திக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

சிவப்பு நிற பஹி கட்டா துணியல் சுற்றப்பட்டு, அதில் ராஜமுத்திரை இடப்பட்ட பையில் டேப்ளெட் வைக்கப்பட்டிருக்கும். குடியரசுத் தலைவரை அவரின் மாளிகையில் சந்தித்தபின் நேராக நாடாளுமன்றத்துக்கு நிர்மலா சீதாராமன் செல்வார்.

கடந்த 2019ம் ஆண்டு நிதிஅமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தொடக்கத்தில் சிவப்பு நிற பஹி கட்டா துணியல் பட்ஜெட் ஆவணங்களை சுற்றி கொண்டு வந்த நிர்மலா சீதாராமன் பின்னர் டிஜிட்டல் பட்ஜெட் வந்தபின் டேப்ளட் கொண்டு வந்தார். 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 11வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக மோடி அரசு ஆட்சியில் இருந்தபோது, மறைந்த நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி பாரம்பரிய சூட்கேஸில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டுவந்தார். அவரைத் தொடர்ந்து நிதிஅமைச்சராக இருந்த பியூஷ் கோயலும் சூட்கேஸில் ஆவணங்களைக் கொண்டுவந்தார்.
நிர்மலா சீதாராமன் நிதிஅமைச்சராக வந்தபின்புதான் பஹிகட்டா சிவப்புத் துணியில் பட்ஜெட் ஆவணங்கள், டேப்ளெட் கொண்டுவரப்படுகிறது.

ஆனால், பட்ஜெட் சூட்கேஸ் கொண்டுவரும் நடைமுறை ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. 1860ம் ஆண்டு  பிரிட்டிஷ் பட்ஜெட் தலைவர் வில்லியம் பி கிளாட்ஸ்டோன் பட்ஜெட் ஆவணங்களை சிவப்பு நிர சூட்கேஸில் பிரிட்டன் ராணியின் லட்சிணை பொருத்தப்பட்டதில் கொண்டுவந்து தாக்கல் செய்தார்.

Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்கள், முதியவர்களுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள்
 

அதன்பின் இந்தியா சுதந்திரம் பெற்றபின் பட்ஜெட் தாக்கலின்போது பல்வேறு நிதிஅமைச்சர்கல் சிவப்பு, கறுப்பு, பிரவுன் உள்ளிட்ட வண்ணத்தில் சூட்கேஸ் கொண்டுவந்து பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். 

கடந்த 1947ம் ஆண்டு முதல்நிதிஅமைச்சரான ஆர்கே சண்முகம் செட்டி முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1950களில் டிடி கிருஷ்ணமாச்சாரி ஆவணங்களை பைலில் கொண்டு வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கறுப்புநிற சூட்கேஸில்பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டு வந்தார்.

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த வரலாற்று பட்ஜெட்டில் ஆவணங்கள் கறுப்புநிற சூட்கேஸில் கொண்டுவரப்பட்டன. முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியும் நிதிஅமைச்சராக இருந்தபோது சிவப்பு நிற ப்ரீப்கேஸில் ஆவணங்களை கொண்டு வந்து தாக்கல் செய்தார். 

கடைசியாக பாஜக ஆட்சியில் பியஷ் கோயல் நிதிஅமைச்சராக இருந்தபோதுதான் சூட்கேஸில் ஆவணங்கள் கொண்டு வந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் நிர்மலா சீதாராமன் வந்தபின் பஹி கட்டாவில்தான் பட்ஜெட் ஆவணங்கள் கொண்டுவரப்பட்டன.

click me!