Share Market Live Today: பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு, நிப்டி ஜோர்

By Pothy RajFirst Published Feb 1, 2023, 9:49 AM IST
Highlights

Share Market Live Today:மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. 

Share Market Live Today: மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. 

பிப்ரவரி 1ம்தேதியான இன்று முதலீட்டாளர்கள் இரு பெரிய அறிவிப்புகளை எதிர்ப்பார்த்துள்ளனர். ஒன்று, மத்திய பட்ஜெட் தாக்கலில் என்னவிதமான அறிவிப்புகளை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார், தொழில்துறை, சர்வதேச முதலீட்டாளர்களுக்கான சலுகைகள், பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த திட்டங்கள் ஆகிய அறிவிப்புகளை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அதானிக்கு ஜாக்பாட் ! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி சிறிதளவு ஏற்றம்

2வதாக, அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தப் போகிறதா என்பதையும் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

கடந்த வாரத்தில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுத்து வருகிறார்கள். ஜனவரியில் மட்டும் ரூ.28,852 கோடிக்கு பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துள்ளனர். பட்ஜெட்டில் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் வரும்பட்சத்தில் பங்குச்சந்தையில் இன்று உற்சாகம் கரைபுரண்டு ஓடி, வர்த்தகம் ஜோராக நடக்கும் என்பதில் சந்தகமில்லை

. அதேசமயம், அந்நிய முதலீட்டாளர்களுக்கான புதிய வரிவிதிப்பு, வரி அதிகரிப்பு போன்றவை இருந்தால் பெரிய சரிவை எதிர்பார்க்கலாம். ஆனால், பொருளாதார ஆய்வறிக்கையில் வளர்ச்சி மற்றும் கார்ப்பரேட் வருமானத்தை உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், புதிய வரிவிதிப்புக்கு வாய்ப்பில்லை.

இந்த உற்சாகத்துடன் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் வர்த்தகத்தை அணுகியதால், காலை முதலே பங்குச்சந்தை உயர்வுடன் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 340 புள்ளிகள் உயர்ந்து, 59,890 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 97 புள்ளிகள் அதிகரித்து, 17,759 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

இந்தியாவில் அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார்? நிர்மலா சீதாராமன் எத்தனையாவது பட்ஜெட்?

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 2 நிறுவனங்களின் பங்குகளைத் தவிர 28 நிறுவனப் பங்குகளும் லாபத்தில் உள்ளன. குறிப்பாக சன்பார்மா, ஐடிசி பங்குகள் மட்டும்சரிவில் உள்ளன.

நிப்டியில் அனைத்து துறைகளின் பங்குகளும் லாபத்தில் உள்ளன. குறிப்பாக பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, ரியல்எஸ்டேட், வங்கித்துறை, நிதிச்சேவை ஆகிய சராசரியாக ஒரு சதவீத லாபத்துடன் உள்ளன.
 

click me!