Adani FPO :அதானி என்டர்பிரைசஸ் FPO பங்குகள் முழுமையாக விற்பனை: ரூ.20ஆயிரம் கோடி 'ஜாக்பாட்'

By Pothy RajFirst Published Jan 31, 2023, 4:39 PM IST
Highlights

அதானி குழுமத்தின் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பொதுப் பங்குகள் விற்பனை அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்தின் இலக்கான ரூ.20ஆயிரம் கோடி திரட்டியுள்ளது.

அதானி குழுமத்தின் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பொதுப் பங்குகள் விற்பனை அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்தின் இலக்கான ரூ.20ஆயிரம் கோடி திரட்டியுள்ளது.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் 4.62 கோடி பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில் அதில் 4.55 கோடி பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. நிறுவனமில்லாத முதலீ்ட்டாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிக அதிகாக 96.16 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளனர். 

உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் காலியான கவுதம் அதானி!!

1.28 கோடி பங்குகள் தகுதிவாய்ந்த நிறுவன முதலீ்ட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டநிலையி்ல் அனைத்தும் விற்பனையானது என்று பங்குசந்தையில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சில்லறை முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பங்குகள் விற்பனைக்கு வரவேற்பு இல்லை. சில்லறை விற்பனைாளர்களுக்கு 2.29 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டன, ஊழியர்களுக்கு 1.60 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. 

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த வாரம் அதானி குழுமம் பற்றி அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்தின் பங்குகள் 20 சதவீதம் சரிந்தன. 

கடந்த 10 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த மோசடிகள், தில்லுமுல்லு, பொய்கணக்கு, பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியது உள்ளிட்டவற்றை வெளிச்சம்போட்டு காட்டி அறிக்கை வெளியிட்டது. 

அதானி-க்கு ரூ.5.86 லட்சம் கோடி காலி! ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.11.60 லட்சம் கோடி அம்போ

இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் ஆட்டம் கண்டன. 3 நாட்களில் அதானி குழுமப் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் சரிந்தது, ஏறக்குறைய அதானி குழுமத்துக்கு ரூ.5.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எப்பிஓ நடப்பதால், பெரிதாக முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்று கருதப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் முதல்நாளில் வரவேற்பு இல்லை. ஆனால், நேற்று அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை விறுவிறுவென உயர்ந்தன. பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் அதானி என்டர்பிரைசஸ் பங்குகள்தான் ஓரளவு உயர்ந்தது. 

இந்நிலையில் எப்பிஓ விற்பனை முடிந்தநிலையில் அனைத்து பங்குகளும் ஏறக்குறைய விற்பனையானது. இதன் மூலம் அதானி குழுமம் இலக்கு வைத்திருந்த ரூ.20ஆயிரம் கோடி நிதி திரட்ட முடியும்


 

click me!