gst new rates : ஜிஎஸ்டி வரி உயர்வால் விலை உயரும் பொருட்கள்: முழுமையான பட்டியல் : ராகுல் காந்தி கண்டனம்

By Pothy Raj  |  First Published Jun 30, 2022, 9:16 AM IST

சண்டிகரில் நடந்த 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது, பல பொருட்களுக்குவரி குறைப்பும், வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்கள்  பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 


சண்டிகரில் நடந்த 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது, பல பொருட்களுக்குவரி குறைப்பும், வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பிடிஆர் அழைப்பை ஏற்றார் நிர்மலா சீதாராமன்

Tap to resize

Latest Videos

சண்டிகரில் 2நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பொருட்களுக்கான வரியைச் சீரமைத்தல், புதிய விதிப்புகளை கொண்டுவருதல், நீக்குதல் ஆகியவற்றை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு அளித்த அறிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக்கொண்டது.

அதேநேரம், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டிஇழப்பீடு நீட்டிப்பு கோரிக்கை குறித்து 2 நாட்கள் கூட்டத்தில் 12க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தின. ஆனால், இழப்பீடு நீட்டிப்புக் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் ஜிஎஸ்டி கவுன்சில் முடிந்தது. 
கேசினோஸ், குதிரைப்பந்தம், ஆன்லைன் கேமிங் ஆகியவை மீது 28% ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து அமைச்சர்கள் குழு பரிந்துரைத்திருந்தது. அந்த அறிக்கையை மறு ஆய்வு செய்து ஜூலை 15ம்தேதிக்குள் தாக்கல் செய்ய அமைச்சர்கள் குழுவுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கேட்டுக்கொண்டது.ஆகஸ்ட்முதல் வாரம் அல்லது 1ம் தேதி சுருக்கமான முறையில் கூட்டம் நடத்தப்படும். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

பாஜக ஆளும் மாநிலங்கள்கூட ஜிஎஸ்டி இழப்பீடு கோரினர்: பிடிஆர் பழனிவேல்ராஜன் பேட்டி

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு வரிவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, புதிதாக சில பொருட்கள் வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சில சேவைகளுக்கும் வரிவிதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

வரிசை எண்

பொருட்கள், சேவைகள்

முந்தைய வரி வீதம்

புதிய வரி வீதம்

1

அச்சகம், வரைதல், எழுதுவதற்கு பயன்படும் மை

12%

18%

2

வெட்டுக்கத்தி, பேப்பர்கத்தி, பென்சில் ஷார்ப்னர், பிளேட், கரண்டி, முட்கரண்டி, ஸ்கிம்மர்ஸ், ஃபோர்க், கேக் சர்வர்

12 %

18%

3

மோட்டார் பம்பு செட், நீர்மூழ்கி பம்பு செட், சப்மெர்சல் பம்ப், பைசைக்கிள் பம்ப்

12%

18%

4

சுத்தம் செய்யும் எந்திரம், தரம்பிரித்தல் எந்திரம், விதை, தானிய பருப்பு, அரவை எந்திரம்,பவன்சக்கி, கிரைண்டர்

5%

18%

5

தூய்மை எந்திரம், முட்டை, காய்கறிகள், பழங்களை தரம்பிரிக்கும் எந்திரம், அதன் பாகங்கள், அரவை எந்திரம், பால் தொழிலுக்கு பயன்படும் எந்திரம்

12%

18%

6

எல்இடி விளக்கு, சர்கியூட் போர்ட்

12%

18%

7

வரைதல் மற்றும் குறிப்புக் கருவிகள்

12%

18%

8

சோலார் வாட்டர் ஹீட்டர் கருவிகள்

5%

12 %

9

பணிமுடிக்கப்பட்ட தோல் பொருட்கள்

5%

12 %

 

சேவைகளுக்கான வரி

 

 

10

சிட்பண்டில் ஃபோர்மேன் சப்ளை

12 %

18%

12

தோல் பொருட்களுக்கான பதப்படுத்தும் கூலி வேலை

5 %

12 %

13

தோல் பொருட்களை வடிமைத்தலுக்கான கூலி வேலை

5 %

12%

14

செங்கல் தொழிலுக்கான கூலி வேலை

5 %

12 %

15

சாலைகள், பாலங்கள், ரயில்வே பணிகள்,மெட்ரோல, இடுகாடு ஒப்பந்தப்பணி

12 %

18%

16

மத்திய அரசு, மாநில அ ரசுகள், உள்ளாட்சிகள், அருங்காட்சியகங்களுக்கான ஒப்பந்தப்பணி

12 %

18%

17

வங்கிகாசோலைகள்

0%

18%

18

வரைபடங்கள், அட்லஸ் மேப், சுவர் வரைபடங்கள், நிலப்பரப்புத் திட்டங்கள் உள்ளி்ட்ட விளக்க வரைபடங்கள்

0%

12%

19

ரூ.1000க்கு குறைவான ஹோட்டல் அறை

5%

12%

20

மருத்துவமனையில் ரூ.5ஆயிரத்துக்கு அதிகமான நோயாளிகள் அறை

0%

5%

21

பாக்கெட்டில் விற்கப்படும் இறைச்சி, மீன்,பனீர், உலர்மக்கானா, கோதுமை, பிற தானியங்கள்

0%

5%

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது, புதிய வரி வி க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பணவீக்கம், விலைவாசி உயர்வால் அவதிப்பட்டுவரும் மக்கள்புதிய வரியால் மேலும் சிரமத்துக்குள்ளாவார்கள் 
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை1 முதல் தடை: பட்டியல் தெரியுமா?

ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் “ வருமானம் குறைதல், வேலைவாய்ப்பு குறைதலுக்கு மத்தியில் விலைவாசி உயர்வு முதலிடத்தில் இருக்கிறது.பிரதமரின் கப்பார் சிங் வரி இப்போது கிரஹஸ்தி சர்வநாஸ்வரி(குடும்பங்களை அழிக்கும்வரி) என வலிமையான வடிவத்தை எடுத்துள்ளது” என விமர்சித்துள்ளார்.
 

click me!