மதுரை நகரில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படும்.தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்அழைப்பு விடுத்ததை ஏற்றுக்கொண்டோம் என்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
மதுரை நகரில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படும்.தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்அழைப்பு விடுத்ததை ஏற்றுக்கொண்டோம் என்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
சண்டிகரில் இரு நாட்கள்47-வது ஜிஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் நிறைவு நாளான இன்று, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:
4 அமைச்சர்கள் குழு அறிக்கை மீது ஜிஎஸ்டி குழு சில முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது வரி சீரமைப்பு குழு, கேசினோ, குதிரைப்பந்தயம், லாட்டரி, ஆன்லைன் கேம் ஆகியவற்றை ஆராயும் அமைச்சர்குழு, ஐடி வரி, விலைஉயர் உலோகம் ஆகியவை பற்றி முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியை சீரமைப்புது குறித்து இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவி்ல்லை. அமைச்சர்கள் குழு இன்னும் காலஅவகாசம் கேட்டுள்ளனர். 4 அமைச்சர்கள் குழுவும் தாக்கல் செய்த அறிக்கை இந்தகூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. எந்த முடிவும் எடுக்கவி்ல்லை.
வரி சீரமைப்புக் குறித்து ஆராயஅமைக்கப்பட்ட முதல்வர் எஸ்ஆர் பொம்மை தலைமையிலான குழு, கேசினோ, ஆன்லைன் கேமிங் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட மேகாலயா முதல்வர் சங்மா தலைமையிலான குழுவினர்இறுதி அறிக்கை ஏதும் தரவில்லை.
தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக ஆராயஅமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் மீது வரி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை மீது விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது.
gst council meeting: ஆன்-லைன் கேம், குதிரைப் பந்தயத்து்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பது ஒத்திவைப்பு?
ஆகஸ்ட் முதல்வாரத்தில் அல்லது 1ம்தேதியில் ஜிஎஸ்டி திட்டம் குறித்து சுருக்கமான கூட்டம் நடத்தப்படும். குதிரைப்பந்தயம், ஆன்லைன் கேமிங், கேசினோஸ்ஆகியவை மீதான வரி குறித்து மறுஆய்வு செய்து வரும் ஜூலை 15்ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கேட்டுக்கொண்டது.
கிரிப்டோகரன்ஸி வரிவிதிப்பு, சொத்துக்கள் குறி்த்து எந்தவிதமான முடிவும் எடுக்கவி்ல்லை. தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பை ஏற்று, அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடக்கும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்