அமைப்பு சாரா துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், சிறு ஆன்லைன் வர்த்தகர்கள் ஜிஎஸ்டியில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்பதிலிருந்து ஜிஎஸ்டி கவுன்சில் விலக்கு அளி்த்துள்ளது. இந்த மாற்றம் 2023,ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
அமைப்பு சாரா துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், சிறு ஆன்லைன் வர்த்தகர்கள் ஜிஎஸ்டியில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்பதிலிருந்து ஜிஎஸ்டி கவுன்சில் விலக்கு அளி்த்துள்ளது. இந்த மாற்றம் 2023,ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
சண்டிகரில் இரு நாட்கள்47-வது ஜிஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் நிறைவு நாளான இன்று, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:
அமைப்புசாரா துறையை மேம்படுத்தவும், சிறுவணிகர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஜிஎஸ்டியில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளி்க்கப்படுகிறது. இது 2023 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். இந்த அறிவிப்பால் 12 ஆயிரம் சிறு வர்தத்கர்கள் பலன் பெறுவார்கள்.
காம்போஷிசன் டீலர்களில் ஆண்டுக்கு ரூ.1.50 கோடி விற்றுமுதல் இருப்பவர்கள், ஜிஎஸ்டி வீதத்தை இன்புட் டேக்ஸ் கிரெடிட்டுடன் செலுத்த வேண்டும். இ்ந்த முடிவு நிச்சயம் தொழில் தொடங்குவதே மேலும் எளிதாகும். குறிப்பாக சிறு, குறு தொழில்கள், கைவினைஞர்கள், பெண் தொழில்முனைவோர் ஆகியோர் பலன் பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்
ஆன்லைன் நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் ரூ.1.50 கோடிவரை விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்கள் காம்போசிஷன் வரிவிதிப்பை தேர்ந்தெடுக்கலாம். அதாவது நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு எது வசதியாக, எளிமையாக இருக்கிறதோ அதை தேர்வு செய்யலாம்.
ஆனால், இந்தப் பலன்களைப் பெறுவதற்கு உரிமையாளர் பான் எண்ணையும், எங்கு தொழில்செய்கிறோம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் மட்டுமே தொழில் தொடங்க அனுமதிக்கப்படும்.
இதற்கு முன் ஆன்லைன் விற்பனையாளர்கள் விற்றுமுதல் ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு கீழ் இருந்தாலே ஜிஎஸ்டியில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டியிருந்தது. இப்போது அந்த அவசியம் இல்லை.