தங்கத்துக்கு இ-வே பில் கட்டாயமாக்கப்படுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு

By Pothy Raj  |  First Published Jun 27, 2022, 5:35 PM IST

e-way bill mandatory for gold  precious stones: தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் ஆகியவற்றை ஒருஇடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல இ-வே பில்லை கட்டாயமாக்குவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசலீக்கும் எனத் தெரிகிறது. 


தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் ஆகியவற்றை ஒருஇடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல இ-வே பில்லை கட்டாயமாக்குவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசலீக்கும் எனத் தெரிகிறது.

ஜூலை முதல் Frooti, Maaza உள்ளிட்ட குளிர்பானங்கள் நிலை எப்படி மாறப்போகுதோ?

Tap to resize

Latest Videos

47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  நாளை மற்றும் நாளை மறுநாள்(28, 29ம் தேதி) சண்டிகரி்ல் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தங்கத்துக்கான இ-வே பில்லைக் கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம். 

குறிப்பாக ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேல் தங்கம், மற்றும் விலை உயர்ந்த கற்களை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு கொண்டு செல்லும்போது, இ-வேபில் காட்டாயமாக்க மாநில நிதிஅமைச்சர்கள் குழுவும் பரி்ந்துரை செய்துள்ளது. 
ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.20 கோடிக்கும் அதிகமாக விற்றுமுதல் செய்யும் வர்த்தகர்கள் மாநிலங்களுக்கு இடையே பரிமாற்றம் செய்யும்போது இ-இன்வாய்ஸ் கட்டாயமாக்கப்படலாம் எனத் தெரிகிறது.

upi payment: உங்களுக்குத்தான்! UPI பேமென்ட் மோசடியிலிருந்து தப்பிக்க 5 எளிய டிப்ஸ்

தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களுக்கு இ-இன்வாய்ஸை நடைமுறைப்படுத்துவது குறதி்து ஜிஎஸ்டி நெட்வொர்க், என்ஐசியுடன் கலந்து ஆலோசித்து செயலாற்ற வேண்டும் எனப்பரிந்துரைக்கும்.

மாநிலங்களுக்குள் தங்கம், விலைஉயர்ந்த கற்களைக்கொண்டு செல்லும்போது அதற்கு இவே பில் விதிப்பதும், அதுதேவையா என்பதை மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். 

வருமான வரி விலக்கும் வேணும், பணமும் சேமிக்கணும் எப்படி? டாப்-10 திட்டங்கள் தெரிஞ்சுக்குங்க?

பதிவு செய்யப்படாத நபர்களிடம் இருந்து பதிவு செய்த நகைக்கடை உரிமையாளர்கள், டீலர்கள் பழைய தங்கம் வாங்கும்போது, ரிசர்வ் சார்ஜ் மெக்கானஷத்தின் கீழ் ஜிஎஸ்டி வரிவிதிப்பது பரிசீலிக்கப்படும்

click me!