தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,440க்கும், சவரன் ரூ.59,520க்கும் விற்பனையாகிறது.
தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குறிப்பாக பெண்கள் தங்க ஆபரணங்களை விரும்பி அணிகின்றனர். இதனால் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். ஆபரணம் என்பதை தாண்டி, சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கான சிறந்த விருப்பமாக தங்கம் உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பதால் அதில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எதிர்பாராத மற்றும் திடீர் செலவுகள் வந்தாலும் தங்கத்தை எளிதாக அடகு வைக்கவோ அல்லது விற்கவோ முடியும். இதன் காரணமாகவும் பலரும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆடம்பரம் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் இருப்பதால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது.
ஒரு சவரன் தங்க நகை 2 லட்சம்.! ஒரு கிராம் 25ஆயிரமாக உயரும் - வெளியான ஷாக் தகவல்
ஆனால் தங்கம் விலை அதிகரித்தாலும் அதன் மீதான மோகம் நகைப்பிரியர்களுக்கு குறைவதே இல்லை. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. அதுவும் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கு விற்பனையாகிறது. அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.109-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை, பணவீக்கம், புவிசார் பதட்டங்கள் ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றும் கூறுகின்றனர். இந்த ஆண்டின் முடிவில் ஒரு கிராம் ரூ.8000-ஐ தொட்டுவிடும் என்றும் தங்கம் விலை ரூ.60,000ஐ கடக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.