ஜூலையில் 3 ரூபாய்; இன்று 2,36,000 ரூபாய் ; MRFஐ முந்தி விலையுயர்ந்த பங்காக மாறிய Penny Stock எது தெரியுமா?

By Ansgar R  |  First Published Oct 29, 2024, 8:38 PM IST

Penny Stock : சுமார் 1.2 லட்சம் மதிப்புள்ள MRF பங்குகளை, இந்த ஆண்டு ஜூலையில் 3 ரூபாய் இருந்த பென்னி ஸ்டாக் ஒன்று முந்தியுள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? வாருங்கள் அந்த சுவாரசியமான பங்கு குறித்து பார்க்கலாம்.


இந்தியப் பங்குச் சந்தையில், MRF லிமிடெட் தான் அதிக விலையுள்ள பங்குகள் என்று நீங்கள் நம்பினால், அது தவறு என்று நிரூபித்துள்ள வேறொரு பங்கு. சுமார் ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள பங்குகளை கொண்ட டயர் தயாரிப்பாளரின் பங்குகள் ஒரு மைக்ரோகேப் பிளேயரால் சிறிதாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல MRFஐ வீழ்த்திய அந்த பங்கு இன்று செவ்வாய் கிழமை பங்குச்சந்தை நிலவரப்படி இருமடங்காக உயர்ந்துள்ளது. சுவாரஸ்யமாக, இந்த பங்கு இந்த ஆண்டு ஜூலையில் ரூ.3.21 மதிப்புள்ள ஒரு பென்னி ஸ்டாகாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

எல்சிட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட், என்ற அந்த பங்கு தான் இன்று செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 29 அன்று பிஎஸ்இயில் மீண்டும் பட்டியலிடப்பட்டது. அதன் நியாயமான மதிப்பு ரூ. 2,25,000 என்ற அளவை இன்று சந்தையில் தொட்டது. ஆனால் அந்த பங்கு மற்றொரு 5 சதவீதம் உயர்ந்து இன்று நாள் இறுதியில் ரூ. 2,36,250 ஆக இருந்தது. இதன் மொத்த சந்தை மூலதனம் கிட்டத்தட்ட ரூ.4,800 கோடியாம். அக்டோபர் 21 தேதியிட்ட பிஎஸ்இ சுற்றறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்களை (IHCs) சிறப்பு அழைப்பு ஏல பொறிமுறையின் மூலம் திங்கட்கிழமை விலையைக் கண்டறிவதாகக் குறிப்பிடுகிறது. சிறப்பு ஏற்பாட்டிற்குப் பிறகு அக்டோபர் 29, செவ்வாய்கிழமை அன்று நடைமுறைக் கட்டணங்கள் தீர்க்கப்பட்டன.

Latest Videos

undefined

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால் எவ்வளவு கட்டணம்? நோட் பண்ணிக்கோங்க!

அப்படி படியிலிடப்பட்ட பங்குகளில் எல்சிட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பங்கும் ஒன்று. மற்ற நிறுவனங்களில் நல்வா சன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், டிவிஎஸ் ஹோல்டிங்ஸ், கல்யாணி இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி, எஸ்ஐஎல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ், ஜிஎஃப்எல், ஹரியானா கேபின் மற்றும் பிலானி இன்வெஸ்ட்மென்ட் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் அடங்கும்.

எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸின் விளம்பரதாரர்கள் இன்று தானாக முன்வந்து ஒரு பங்கின் அடிப்படை விலையான ரூ. 1,61,023க்கு, அதன் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பை வழங்கினர். அதற்கான சிறப்பு தீர்மானமும் முன்மொழியப்பட்டது. இருப்பினும், தேவையான பெரும்பான்மையான பொது பங்குதாரர்கள் குறிப்பிட்ட வரம்பை பெறாததால் அந்த தீர்மானம் தோல்வியடைந்தது. எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் சுமார் 2,00,000 பங்கு மூலதனத்துடன், 2,83,13,860 ஈக்விட்டி பங்குகளை, (அல்லது) ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட்டில் 2.95 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இது அதன் முந்தைய முடிவின்படி கிட்டத்தட்ட ரூ.8,500 கோடி மதிப்புடையது. இதுவே பங்குச் சந்தைகளில் இந்தப் பங்கின் விலை உயர்ந்ததாக அமைகிறது.

வெல்த்மில்ஸ் செக்யூரிட்டிஸின் ஈக்விட்டி ஸ்ட்ரேடஜி இயக்குனர் கிராந்தி பத்தினி கூறுகையில், முதலீட்டாளர்களுக்கான பங்கு விலைகளை நிர்ணயிக்கும் பிற நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் வணிகம் அத்தகைய நிறுவனங்களுக்கு உள்ளது. அத்தகைய நிறுவனங்களில் பணத்தை வைப்பது முற்றிலும் தனிநபர்களின் விருப்பத்தை பொறுத்தது. மேலும் இந்த நிறுவனங்களுக்கு பணப்புழக்க அபாயங்கள் இருக்கலாம் என்பதையும் அதில் முதலீடு செய்பவர்கள் கவனிக்க வேண்டும் என்றார் அவர்.

"இது போன்ற குறுகிய காலத்தில் அதிக அளவில் உயரும் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் பணப்புழக்கங்கள் மற்றும் அந்த நிறுவனம் மேற்கொள்ளும் வணிகத்தின் தன்மையைப் பார்க்க வேண்டும். அது அவர்கள் எந்த அளவிற்கு ரிஸ்க் எடுக்கலாம் என்பதை தீர்மானிக்கும். மேலும் அது மட்டுமே அவர்களின் பணத்தை பாத்திரமாக வைக்க உதவும். அத்தகைய நிறுவனங்கள் சில மதிப்புகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் முதலீட்டாளர்கள் அதிலிருந்து வெளியேற ஒரு வழியை அறிந்திருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

இந்தியாவில் சிறந்த கார் கடன் வட்டி விகிதங்களைப் பெறுவதற்கான வழிகாட்டி

click me!