
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு:
தங்கதத்தின் விலை கடந்த 8 நாட்களாக தொடர்ந்து உயரந்து வருகிறது. கடந்த 22ம் தேதிக்குப்பின் தங்கத்தின் விலை குறையாமல் தொடரந்து உயர்ந்து வருகிறது. 21 நாட்களுக்குப்பின் மீண்டும் தங்கத்தின் விலை சரவன் ரூ.38ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த இரு நாட்களாக தங்கம் கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து மீண்டும் சவரன் 38ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது.
38 ஆயிரத்தை கடந்து விற்பனை:
கடந்த 21 நாட்களாக தங்கம் சவரன் ரூ.37ஆயிரத்துக்குள்ளேதான் இருந்த நிலையில், முதல் முறையாக கடந்த வியாழக்கிழமை ரூ38ஆயிரத்தை எட்டியது. அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டிவீதத்தை 75 புள்ளிகள் உயர்த்தப்பட்டது இனிவரும் நாட்களிலும் வட்டி வீதம் உயர்வு இருக்கும் ஆனால், தொடர்ந்து இருக்காது எனத் தெரிவி்க்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப்பின் தங்கம் விலையில் மீண்டும் ரூ.38ஆயிரத்தை எட்டியுள்ளது.
மேலும் படிக்க:gold rate today: தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: சவரன் 300ரூபாய்க்கு மேல் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?
நேற்றைய விலை நிலவரம்:
சென்னையில் நேற்று 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 38 ரூபாய் அதிகரித்து ரூ4,805ஆகவும், சவரணுக்கு ரூ.304அதிகரித்து ரூ.38,136க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 2 வது நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதே போல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.10 பைசா அதிகரித்து, ரூ.62.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.1100 அதிகரித்து, ரூ.62,300க்கும் விற்கப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்:
இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து, ரூ.4815 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை பொறுத்தவரையில், வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.40 பைசா அதிகரித்து, ரூ.63.70 ஆகவும், கிலோவுக்கு ரூ.1400 அதிகரித்து, ரூ.63,400க்கும் விற்கப்படுகிறது.
மேலும் படிக்க:gold rate today: உச்சத்தில் தங்கம் விலை! சவரன் மீண்டும் ரூ.38ஆயிரத்தைக் கடந்தது: இன்றைய நிலவரம் என்ன?
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.