தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 38ரூபாயும், சவரணுக்கு 304 ரூபாயும் அதிகரித்துள்ளது.
உலக வங்கி தலைமைப் பொருளாதார வல்லுநராக 2-வது இந்தியர் நியமனம்: யார் இந்த இன்டர்மிட் கில்?
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,767க்கும், சவரண் ரூ.38,136க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கத்தின் விலையில் 5-வது நாளாக உயர்ந்துள்ளது.
இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 38 ரூபாய் அதிகரித்து ரூ4,805ஆகவும், சவரணுக்கு ரூ.304அதிகரித்து ரூ.38,136க்கும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4805ஆக விற்கப்படுகிறது.
முதன்முதலாக வருவாய் இழப்பைச் சந்தித்த மெட்டா(meta): 280 கோடி டாலர் சரிவு
தங்கதத்தின் விலை கடந்த 8 நாட்களாக தொடர்ந்து உயரந்து வருகிறது. கடந்த 22ம் தேதிக்குப்பின் தங்கத்தின் விலை குறையாமல் தொடரந்து உயர்ந்து வருகிறது. 21 நாட்களுக்குப்பின் மீண்டும் தங்கத்தின் விலை சரவன் ரூ.38ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த இரு நாட்களாக தங்கம் கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து மீண்டும் சவரன் 38ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
கடந்த 21 நாட்களாக தங்கம் சவரன் ரூ.37ஆயிரத்துக்குள்ளேதான் ஊசலாடிக்கொண்டிருந்ததே தவிர, ரூ.38ஆயிரத்தைத் தொடவில்லை. முதல் முறையாக 21 நாட்களுக்குப்பின் நேற்று ரூ38ஆயிரத்தை எட்டியுள்ளது.
கல்லாகட்டும் மத்திய அரசு! 5ஜி அலைக்கற்றை 2ம் நாள் ஏலத்தில் ரூ.1.49 லட்சம் கோடி குவிந்தது
அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டிவீதத்தை 75 புள்ளிகள் உயர்த்தப்பட்டது இனிவரும் நாட்களிலும் வட்டி வீதம் உயர்வு இருக்கும் ஆனால், தொடர்ந்து இருக்காது எனத் தெரிவி்க்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப்பின் தங்கம் விலையில் மீண்டும் ரூ.38ஆயிரத்தை எட்டியுள்ளது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.10 பைசா அதிகரித்து, ரூ.62.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.1100 அதிகரித்து, ரூ.62,300க்கும் விற்கப்படுகிறது.