உலக வங்கியின் தலைமைப்ப பொருளாதார வல்லுநராக இந்தியாவைச் சேர்ந்த இன்டர்மிட் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை அலங்கரிக்கும் 2-வது இந்தியர்.
உலக வங்கியின் தலைமைப்ப பொருளாதார வல்லுநராக இந்தியாவைச் சேர்ந்த இன்டர்மிட் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை அலங்கரிக்கும் 2-வது இந்தியர்.
இதற்கு முன் கவுசிக் பாசு, 2012-2016ம் ஆண்டுவரை தலைமைப் பொருளாதார வல்லுநராக இருந்தார்.அதன்பின் தற்போது கில் நியமிக்கப்படுகிறார்.
facebook: meta: முதன்முதலாக வருவாய் இழப்பைச் சந்தித்த மெட்டா(meta): 280 கோடி டாலர் சரிவு
இது தவிர சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியரான ரகுராம் ராஜன், உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் ஆகியோரும் நியமிக்ககப்பட்டனர்.
உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநராக நியமிக்கப்பட்டுள்ள இன்டர்மிட் கில்லுக்கு 20 ஆண்டுகாலம் 1993 முதல் 2016 வரை உலக வங்கியில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. உலக வங்கியின் தலைமைப் பொருளாதார அலுவலகத்தில் மேம்பாட்டுக் கொள்கை வடிவமைப்பு இயக்குநராக, ஐரோப்பிய, மத்திய ஆசியாவுக்கு தலைமைப் பொருளாதார வல்லுநராக கில் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை தொடர்ந்து 2-வதுமுறையாக 75 புள்ளிகள் உயர்த்தியது
2009ம் ஆண்ட பொருளாதார புவியியல் குறித்த உலக மேம்பாட்டு அறிக்கையை கில் தயாரித்து அளித்தார். அதில், குறிப்பிட்ட அளவு வருமானநிலையை வளரும் நாடுகள் அடைந்தபின் எவ்வாறு தேக்கமடைகின்றன என்ற அவரின் அறிக்கை பிரபலமானதாகும்.
பொருளாதார நோபல் பரிசு வாங்கிய கேரி பெக்கர், ராபர்ட் லூகாஸின் மாணவர் கில். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற கில், டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர். சிக்காகோ பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் கவுரவப்பேராசிரியராக கில் இருந்தார்.
பொலிவுபெறும் பிஎஸ்என்எல்: மறுசீரமைக்க ரூ.1.64 லட்சம் கோடி: 4ஜி வருகிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறுகையில் “ இன்டர்மிட் கில்லுக்கு மதிப்பு மிகுந்த அனுபவம், கள அனுபவம் இருக்கிறது. இ்ந்த பெரிய பொறுப்பு, பதவிக்கு கில் பொருத்தமானவராகஇருப்பார்” எனத் தெரிவி்த்தார்