அமெரி்க்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு பெடரல்(ரிசர்வ்)வங்கி கடனுக்கான வட்டியை 75 புள்ளிகள் உயர்த்தியது.
அமெரி்க்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு பெடரல்(ரிசர்வ்)வங்கி கடனுக்கான வட்டியை 75 புள்ளிகள் உயர்த்தியது.
ஏற்கெனவே கடும் விலைவாசி ஏற்றத்தால் தவித்து வரும் அமெரிக்க மக்கள், இனிமேல் கடனுக்கு அதிகமான வட்டி செலுத்த வேண்டியதிருக்கும். தொடர்ந்து 2வது மாதமாக 75 புள்ளிகளை பெடரல் வங்கி உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டில் இது 4-வது முறையாக வட்டிவீதம் உயர்த்தப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த ஜூன் மாதம் 9.1 சதவீதமாக அதிகரித்தது. நாளுக்கு நாள் அமெரிக்கப் பொருளாதாரம் இந்த அளவு மோசமான நிலைக்குச் சென்றதில்லை.
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, வேலையின்மை, எரிபொருள் விலை உயர்வு, வீ்ட்டுவாடகை உயர்வு என மக்கள் கடுமையான சூழலை சந்தித்து வருகிறார்கள். பொருளாதாரத்தை வழிக்குக்கொண்டுவரும் நோக்கில் இந்த வட்டி அதிகரிப்பு நடந்துள்ளது.
இதன்படி அமெரிக்காவில் கடனுக்கான வட்டிவீதம் 2.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பூஜ்ஜியமாக இருந்த கடனுக்கான வட்டி தற்போது 2.50 சதவீதம் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கம், விலைவாசி உயர்வு அதிபர் ஜோ பிடனுக்கு பெரும் நெருக்கடியை அளித்துள்ளது. ஆனால், உக்ரைன் ரஷ்யா போரால் ஏற்பட்ட விளைவால்தான் சர்வதேச அளவில உணவு மற்றும் கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்கள் விலை அதிகரித்துள்ளது என்று அதிபர் பிடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் வட்டிவீதத்தை உயர்த்தாமல் இருந்தால் பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் செல்லும். அமெரிக்கப் பொருளாதாரம் பொருளதார மந்தநிலையை தவிர்க்க நினைக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பெடரல் வங்கி நடவடிக்கை எடுக்கும். நமக்கு வரும் இடர்களை குறைக்க பெடரல் வங்கி நினைக்கிறது. ஆதலால், இடர்கள் குறையும்வரை தொடர்ந்து வட்டிவீதம் அதிகரிப்பு இருக்கும்.
பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்தநிலையில்தான் இருக்கிறது. சப்ளை, தேவை இரண்டுமே சமநிலையில் இல்லை. உணவுப்பொருட்கள், எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக விலை உயர்வு அழுத்தம் அனைத்து இடங்களிலும் இருக்கிறது. தேவைப்படும்போது வட்டிவீதம் அடுத்தடுத்து இருக்கும்.
அமெரிக்க பொருளாதாரத்தில் வட்டிவீத அதிகரிப்பால் மக்கள் செலவிடுவது குறைந்து வருகிறது, இதனால் கடைகளில் விற்பனையும் குறைந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது, வேலையின்மை அளவு குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும், ஊழியர்களின் ஊதியமும் அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு பாவெல் தெரிவித்தார்