5g spectrum auction:கல்லாகட்டும் மத்திய அரசு! 5ஜி அலைக்கற்றை 2ம் நாள் ஏலத்தில் ரூ.1.49 லட்சம் கோடி குவிந்தது

Published : Jul 28, 2022, 10:49 AM IST
5g spectrum auction:கல்லாகட்டும் மத்திய அரசு! 5ஜி அலைக்கற்றை 2ம் நாள் ஏலத்தில் ரூ.1.49 லட்சம் கோடி குவிந்தது

சுருக்கம்

5ஜி அலைக்கற்றை ஏலத்தின் 2-வது நாளும் ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ராம் விலை கேட்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டல் நிறுவனம் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், 3-வதுநாளாக இன்றும் ஏலம் தொடர்கிறது.

5ஜி அலைக்கற்றை ஏலத்தின் 2-வது நாளும் ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ராம் விலை கேட்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டல் நிறுவனம் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், 3-வதுநாளாக இன்றும் ஏலம் தொடர்கிறது.

5ஜி அலைக்கற்றையின் நேற்றைய ஏலத்தில் 5 சுற்றுகள் ஏலம் நடந்தது. 

உச்சத்தில் தங்கம் விலை! சவரன் மீண்டும் ரூ.38ஆயிரத்தைக் கடந்தது: இன்றைய நிலவரம் என்ன?

முதல்நாள் ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல், கவுதம் அதானி,வோடபோன்ஐடியா இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் முதல்நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் கேட்கப்பட்டது. 2வதுநாளான நேற்று 5 சுற்றுகள் ஏலம் நடந்தது.

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் “ 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடக்கும் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கிறது. 700மெகாஹெட்ஸ் அலைவரிசைக்கு கடந்த 2016, 2021ம் ஆண்டு ஏலத்தில் யாரும் வாங்க முன்வரவில்லை.

ஆனால், தற்போது சாதகமான நிலை இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 5ஜி ஏலத்துக்குப்பின் தொலைத்தொடர்பு துறை புதிய உத்வேகம் பெறும்.

அமெரி்க்க பெடரல் வங்கி வட்டியில் 75 புள்ளிகள் இன்று உயரலாம்? இந்தியாவுக்கு பாதிப்பு வருமா?
வியாழக்கிழமையும் ஏலம் தொடர்ந்து நடக்கும். இதுவரை 9 சுற்றுகள் ஏலத்தில் ரூ.1.49,454 கோடிக்கு ஏலம் கோரப்பட்டுள்ளன. 700, 800, 900, 1800, 2100, 2500, 3300 ஆகிய மெகாஹெட்ஸ், 26 ஜிகாகெட்ஸ் ஆகியவை நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. எங்கள் கணிப்பை விட அதிகமாக ஏலத்தொகை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

2015ம் ஆண்டில் ரூ.1.09 லட்சம் கோடி கிடைத்ததுதான் அதிகபட்சம் இந்த முறை ரூ.1.45 லட்சம் கோடி வந்துள்ளது.  இவ்வாறு அஸ்வினி ஸைஷ்ணவ் தெரிவி்த்தார்

4ஜி சேவையைவிட 5ஜி சேவையில் இணையதளம் 10 மடங்கு வேகமாக இருக்கும். தொடர்பு கொள்வதில் சிக்கல் இருக்காது, டேட்டாவை விரைவாகப் பகிர்ந்து கொள்ள முடியும். குறைந்த அளவு டவர் இருந்தால்கூட 5ஜி சேவையில் அதிக தரமான வீடியோவை சில வினாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

5ஜி அலைக்கற்றை ஏலம்: முதல்நாளிலேயே ரூ.1.45 லட்சம் கோடி குவிந்தது: அதானி, அம்பானி போட்டி

மெட்டாவெர்ஸ், சுகாதாரம், மருத்துவம், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்5ஜியின் சேவை முக்கியப் பங்கு வகிக்கும்.

ஏலம் முடிந்தபின் நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் அக்டோபர் மாதத்துக்குள் 5ஜி சேவையைத் தொடங்கவும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!