
ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்குள் சம்பாதிப்பவர்களும் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வது கட்டாயமில்லை என்றாலும், எதிர்காலம் கருதி ரிட்டன் தாக்கல் செய்வதில் தவறில்லை.
2021-22ம் ஆண்டுக்கான வருமானவரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசித் தேதியாகும். வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வதில் வருமானவரி செலுத்துவோர் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.
உலக வங்கி தலைமைப் பொருளதார வல்லுநராக 2-வது இந்தியர் நியமனம்: யார் இந்த இன்டர்மிட் கில்?
இந்த சூழலில் வருமானவரி வரம்புக்குள்வருவோர் மட்டும்தான் ஐடி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், வருமானவரி வரம்புக்குள் வராதவர்கள், அதாவது ரூ.2.50 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் இருந்தால் ஐடி ரிட்டன் தேவையில்லை.
ஆனாலும், ரூ.2.50லட்சத்துக்குள் வருமாம் ஈட்டுவோரும் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யலாம். அவ்வாறு செய்வதால் தவறு ஏதும் இல்லை, நன்மைதான். ரிட்டன் தாக்கல் செய்தால்தான் டிடிஎஸ் போன்றவை பெற முடியும். அதற்கு ஆண்டுக்கு ஐடி ரிட்டன் தாக்கல் செய்திருப்து அவசியம்.
Nil வருமானவரி ரிட்டன் என்றால் என்ன
ஒருவர் வருமானவரி செலுத்தும் வருமான வரம்புக்குள் ஆண்டு வருமானம் இல்லாவிட்டாலும், நில் ரிட்டன் தாக்கல் செய்யலாம். இந்த நபர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை தொடர்ந்து 2-வதுமுறையாக 75 புள்ளிகள் உயர்த்தியது
ஆனால், தனக்குரிய வருமான ஆதாரங்கள் குறித்து நில்ரிட்டனாகத் தாக்கல் செய்யலாம். இதன் மூலம் இந்த நபர் வருமானவரி வரும்புக்குள் இல்லை என்பதை வருமானவரித்துறையினர் தெரிந்து கொள்வார்கள்.
யார் nil ஐடி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்
ஆண்டு வருமானம் வரி செலுத்தும் வரி வரும்புக்குள் இருப்போர், அதேசமயம், தனதுவருமான ஆதாரங்களை நேர்மையாக வைக்க விரும்புவோர் ஐடி ரிட்டன் தாக்கல் செய்யலாம். பல ஆண்டுகளாகவருமானவரி கணக்குத் தாக்கல் செய்தவர், இந்த ஆண்டு வருமானவரி வரம்புக்குள் வராவிட்டால்கூட நில் ரிட்டன் தாக்கல் செய்யலாம். டிடிஎஸ் பிடிக்கப்பட்டவர்களும் ரீபண்ட் பெறுவதற்கு நில் ஐடிஆர் தாக்கல் செய்யலாம்.
முதன்முதலாக வருவாய் இழப்பைச் சந்தித்த மெட்டா(meta): 280 கோடி டாலர் சரிவு
ஏன் nil ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்
வருமானவரி ரிட்டன் என்பது நமது வருமானத்துக்கான ஆதாரம். இதன் மூலம் நாம் வெளிநாட்டுக்குச் செல்ல விசா அல்லது பாஸ்போர்ட் பெறுவது எளிதாகும். வங்களில் கடன் பெறுவது சுலபமாகும். அதுமட்டுமல்லாமல் வருமானவரித்துறையினருக்கு நமது வருமான அளவு தெரியப்படுத்துவதால் தேவையற்ற சர்ச்சைகளில் இருந்து தப்பிக்கலாம்.
Nil ஐடிஆர் நன்மைகள் என்ன
ஒரு தொழிளியிடம் டிடிஎஸ் பிடிக்கப்பட்டிருந்தால், அதை திரும்பப்பெறுவதற்கு ஐடிஆர் உதவும். எந்தவிதமான பிடித்தமும் இல்லாதவர்கள், வருமானம் கூட வரிசெலுத்தும் அளவுக்குவரும். அந்தநேரத்தில் தள்ளுபடி போக வருமானம் ரூ.2.50லட்சத்துக்குள் கீழ் செல்லும். அந்த நேரத்தில் நில் ரிட்டன் தாக்கல் செய்யலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.