itr filing date: ஐடி ரிட்டன் தாக்கலுக்கு 31ம்தேதி கடைசி: தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

By Pothy Raj  |  First Published Jul 29, 2022, 5:47 PM IST

வருமானவரி செலுத்துவோர் 2021-22ம் ஆண்டுக்கான தங்கள் வருமானவரி ரிட்டனைத் தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசியாகும். அது தொடர்பாக 10 முக்கிய அம்சங்களைத் தெரிந்து கொள்ளலாம்.


வருமானவரி செலுத்துவோர் 2021-22ம் ஆண்டுக்கான தங்கள் வருமானவரி ரிட்டனைத் தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசியாகும். அது தொடர்பாக 10 முக்கிய அம்சங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வருமானவரி செலுத்துவோர் ரிட்டன் தாக்கல் செய்ய வரும் 31ம்தேதி கடைசித் தேதி. இந்த தேதியை தவறவிட்டால், ரிட்டன் தாக்கல் செய்யும்போது அபராதம் செலுத்தவேண்டியதிருக்கும், அபராதத்துக்கு வட்டியும் செலுத்த வேண்டும்.

Tap to resize

Latest Videos

இலங்கை அரசுக்கு எந்தவிதமான புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி கைவிரிப்பு

வருமானவரி செலுத்துவோர் தெரிந்துகொள்ள வேண்டிய10 முக்கிய அம்சங்கள்


1.    ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.5லட்சத்துக்கு அதிகமாக இருந்து அவர் 31ம் தேதிக்குள் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால், வருமானவரிச்ச ட்டம் பிரிவு 20ன் கீழ் ரூ.5ஆயிரம்அபராதம் விதிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

2.    வருமானவரி செலுத்துவோர் ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் வரிசெலுத்தும் தொகையில் 50 சதவீதம் அபராதமாகவும், மோசமான நடந்தால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் கிடைக்கும்.

3.    வருமானவரித் துறைக்கு செலத்தும் அபாரத்தை உரிய நேரத்தில் செலுத்தத் தவறினால் அந்த அபராதத்துக்கு ஒரு சதவீத வட்டி செலுத்த வேண்டும்.

4.    வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் முன், பான்,ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பான்-ஆதார் இணைப்பு கடைசித் தேதி வரும் செப்டம்பர் 30ம் தேதி.

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: சவரன் 300ரூபாய்க்கு மேல் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

5.    வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யத் தவறினால், டிடிஎஸ் பிடித்தத்திலிருந்து எந்தத் தொகையையும் ரீபண்ட் பெற முடியாது.

6.    வருமானவரி செலுத்துவோர் சரியான ரிட்டன் படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது வருமானத்துக்கு ஏற்ப, எந்தவிதமான வருமானம் ஆகியவற்றுக்கு ஏற்பட ஐடிஆர்-1, ஐடிஆர்-2 எனத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

7.    ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்தால்தான் ரீபண்ட் தொகையை வருமானவரித்துறை வரிசெலுத்துவோர் வங்கிக்கணக்கிற்கு மாற்றும். பான்,ஆதார் இணைக்க ஒருவேளை மறந்துவிட்டால் ரீபண்ட் கிடைக்காது.

8.    ஒரு நிதியாண்டில் இரு நிறுவனங்களில் பணியாற்றம் ஆகி, புதிய வேலையில் இணைந்திருக்கலாம். அப்போது, முந்தைய நிறுவனத்தில் வாங்கிய ஊதியம், தற்போது பணியாற்றும் நிறுவனத்தில் வாங்கும் ஊதிய விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

ஐடி ரிட்டன் தாக்கல் செய்வது எப்படி , யாருக்கு வரிச் சலுகை, எதற்கு வரி? தெரிந்து கொள்ளவோம்

9.    ஐடிஆர் தாக்கலின்போது சிறிய தவறுகூட இல்லாமல் கவனமாகஇருக்க வேண்டும். அவ்வாறு தவறு இருந்தால், அது நிராகரிக்கப்படும். சரியான நிதியாண்டைத் தேர்ந்தெடுக்காவிட்டால்கூட நிராகரிப்பு வரலாம் 

10.    2022-23ம் ஆண்டில் ஜூலை 28ம் தேதிவரை 4.09 கோடிபேர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். 3.15  கோடி ஐடிஆர் சரிபாக்கப்பட்டுள்ளன, 2.41 கோடி ஐடிஆர் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது

click me!