தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் நகர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 900 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் நகர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 900 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாயும், சவரனுக்கு 440 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,820 ஆகவும், சவரன், ரூ.38,560 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு! 2 நாட்களில் சவரனுக்கு ரூ.500 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ரூ.4,875 ஆகவும், சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்து, ரூ.39 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,7875க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்துடன் நகர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ஏறக்குறைய 930 ரூபாய் அதிகரித்துள்ளது, நீண்ட காலத்துக்குப்பின் சவரன் ரூ.39ஆயிரத்தை எட்டியுள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பணவீக்க புள்ளிவிவரங்கள் நேற்று வெளியானதில், எதிர்பார்த்த அளவுக்கு பணவீக்கம் உயரவில்லை.இதனால் வரும் நிதிக்கொள்ளைக் கூட்டத்தில் பெடரல் வங்கி வட்டிவீதத்தை பெரிதாக உயர்த்தவாய்ப்பில்லை என்ற தகவல் வெளியானது.
இதன் காரணமாக அமெரிக்கப் பங்குச்சந்தையும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது, ஆசியச்சந்தையும் ஏற்றத்துடன் நகர்ந்து வருகிறது. இந்திய பங்குச்சந்தையிலும் காலை முதலே வர்த்தகம் உற்சாகத்துடன் இருந்து வருகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு! நடுத்தரக் குடும்பத்தினருக்கு நிம்மதி! இன்றைய நிலவரம் என்ன?
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் 113 காசுகள் உயர்ந்து, ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு இனிமேல் அதிகரிக்கும், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.67.00 ஆக இருந்தநிலையில் 50 காசு அதிகரித்து, ரூ.67.50ஆகவும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து, ரூ.67,500 ஆகக் ஏற்றம் பெற்றுள்ளது.