gold rate today:தங்கம் விலை இன்ப அதிர்ச்சி! காரணம் என்ன?சவரனுக்கு ரூ.300க்கு மேல் சரிவு :இன்றைய நிலவரம் என்ன?

By Pothy Raj  |  First Published Sep 27, 2022, 10:11 AM IST

தங்கம் விலை அதிரடியாக இன்று குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்த விலை குறைவு இந்த வாரத்திலும் நீடிக்கிறது, சவரன் மீண்டும் ரூ.36ஆயிரத்துக்குள் சரிந்தது.


தங்கம் விலை அதிரடியாக இன்று குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்த விலை குறைவு இந்த வாரத்திலும் நீடிக்கிறது, சவரன் மீண்டும் ரூ.36ஆயிரத்துக்குள் சரிந்தது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 41 ரூபாயும், சவரனுக்கு ரூ.328 குறைந்துள்ளது.  

Tap to resize

Latest Videos

அனில் அம்பானிக்கு நவம்.17 வரை கெடு! வருமானவரி துறை நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,651 ஆகவும், சவரன், ரூ.37,208 ஆகவும் இருந்தது. 

நீங்கள் வங்கியில் லாக்கரை வைத்திருக்கிறீர்களா? ஆர்.பி.ஐ விதித்த அதிரடி விதிமுறைகள் - என்னென்ன தெரியுமா?

இந்நிலையில் செவ்வாய்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 41ரூபாய் சரிந்து ரூ.4,610ஆக குறைந்தது. சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்து, ரூ.36,880ஆக குறைந்துள்ளது. 
கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,610ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த வாரத்தில் கடும் ஏற்ற இறக்கத்துடனே சென்றாலும் கிராமுக்கு ரூ.18 அளவில்தான் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று,  தங்கத்தின் விலை பெரிதாக மாற்றமில்லை, சவரனுக்கு 8 ரூபாய் மட்டுமே உயர்ந்தது. ஆனால் இன்று அதிரடியாக தங்கம் விலை கிராமுக்கு 41 ரூபாயும், சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்துள்ளது. 

இந்த திடீர் விலை குறைவு,  தங்க நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை நாளுக்குநாள் பெரும் மாற்றத்துடன் நகர்ந்துள்ளதால், விலை குறைந்துள்ளபோதே வாங்குவது சிறப்பு என்று சந்தை வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்திவிட்டதால், உலகளவில் மற்ற நாடுகளின் கரன்ஸிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது, டாலர் மதிப்பு வலுவடைந்துள்ளது. இங்கிலாந்து பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு டாலருக்கு எதிராகச் சரிந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. டாலருக்கு எதிராக பல நாடுகளின் கரன்ஸிகளின் மதிப்பும் சரிந்துள்ளதால், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வருகிறது. இதனால்தான் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.60.70ஆகவும், கிலோ ரூ.60,700 ஆகவும் விற்கப்படுகிறது

click me!