தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று குறைந்துள்ளது. இது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று குறைந்துள்ளது. இது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த 7ம் தேதியிலிருந்து குறைந்துவருகிறது. அந்த வகையில் பார்த்தால் கடந்த 8 மற்றும் 10ம் தேதி தவிர்த்து மற்ற நாட்களில் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,340ஆகவும், சவரன், ரூ.42,720ஆகவும் இருந்தது.
ஊசலாட்டத்தி்ல் தங்கம் விலை! கொஞ்சூண்டு குறைவு! இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூ.5,335ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 680 எனச் சரிந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,335க்கு விற்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் தங்கம் விலை சரிந்து வருவது நடுத்தர குடும்பத்தினருக்கு நிம்மதியைத் தருகிறது. சவரன் ரூ.43 ஆயிரத்தில் இருந்து தற்போது, ரூ.42 ஆயிரத்துக்குள் வந்ததுள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை அடுத்துவரும் கூட்டத்தில் உயர்த்தும் என்ற தகவலால் டாலர் வலுப்பெற்று வருகிறது, அந்நிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைத்து பங்குப்பத்திரங்களிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் தங்கத்தின் தேவை குறைந்து விலை குறையத் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்! நகை வாங்குபவர்கள் என்ன செய்ய?
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.72.70 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 70 பைசா குறைந்து, ரூ.72.00 ஆகவும், கிலோ ரூ.72,700 ஆக இருந்தநிலையில், கிலோவுக்கு ரூ.700 குறைந்து, ரூ.72,000 ஆகச் சரிந்துள்ளது.