Forbes-ன் டாப் 10 உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி பெர்னாட் அர்னால்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர் பட்டியல் போர்ப்ஸ் இதழால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த தரவரிசையின் முதல் பதிப்பு 1987 இல் வெளியிடப்பட்டது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் டாப் 10 இடங்களை யார் யார் பிடித்துள்ளனர் என்று தெரியுமா? டாப் 10 பெரும்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி பெர்னாட் அர்னால்ட் முதலிடம் பிடித்துள்ளார். டாப் 10 உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெர்னார்ட் அர்னால்ட் :
undefined
டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தில் உள்ளார். இவர் உலகின் மிகப்பெரிய ஆடம்பரப் பொருட்கள் நிறுவனமான "Moet Hennessy Louis Vuitton (LVMH)" ன் CEO ஆவார், அவரின் நிறுவனம் சுமார் 70 புகழ்பெற்ற ஃபேஷன் மற்றும் அழகுசாதனப் பிராண்டுகளை உள்ளடக்கியது. அர்னால்ட்டின் மொத்த சொத்து மதிப்பு 230.5 பில்லியனர் டாலராகும்
எலான் மஸ்க்
உலகின் பெரும்பணக்காரர் பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பது எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா (எலக்ட்ரிக் கார் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் $44 பில்லியனுக்கு வாங்கினார். பின்னர் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த அவர் சமீபத்தில் ட்விட்டரின் பெயரை X என்று மாற்றினார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 210.5 பில்லியன் டாலராகும்.
ஜெஃப் பெசோஸ்
அமேசான் நிறுவனர், ஜெஃப் பெசோஸ், 199.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். அவர் சமீபத்தில் சரிவை சந்தித்தாலும், அவரின் ஆண்டு வருமானம் $57.7 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது.
மார்க் ஜுக்கர்பெர்க்
அமெரிக்க தொழிலதிபரும் கோடீஸ்வரருமான மார்க் ஜுக்கர்பெர்க் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார். இவர் கணினி புரோகிராமர், இணைய தொழில்முனைவோர் மற்றும் பரோபகாரர் என பன்முகங்களை கொண்டவர். பேஸ்புக் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்களை துணை நிறுவனராகவும், CEOவாக இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 176.1 பில்லியன் டாலராகும். மற்றும் கட்டுப்பாட்டு பங்குதாரராக உள்ளார்.
லாரி எலிசன்
உலக பெரும் பணக்காரர் பட்டியலில் லாரி எலிசன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆரக்கிள் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் இருக்கிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 142.26 பில்லியன் டாலராகும்.
முகேஷ் அம்பானியின் பெரும் பணக்கார சம்மந்திகள்.. யாருடைய சொத்து மதிப்பு அதிகம் தெரியுமா?
வாரன் பஃபேட்
வரலாற்றின் மிகச் சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபே Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனம் Geico, Duracell மற்றும் டெய்ரி குயின் போன்ற பல நிறுவனங்களை உள்ளடக்கிய முதலீட்டு நிறுவனமாகும். உலக பெரும் பணக்காரர் பட்டியலில் இவர் 6-வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 134.1 பில்லியன் டாலராகும்.
பில் கேட்ஸ்
உலக பெரும் பணகாரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் 7-வது இடத்தில் உள்ளார். இவர் 1975 இல் பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 128.4 பில்லியன் டாலராகும். பில் கேட்ஸ் அமெரிக்காவில் விவசாய நிலங்களின் மிகப்பெரிய உரிமையாளராக இருக்கிறார். மேலும் அவர் கனடாவின் தேசிய இரயில்வே மற்றும் ஆட்டோநேஷன் போன்ற பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
ஸ்ட்வ் பால்மர்:
அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஸ்டீவ் பால்மர் பால்மர் இந்த பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறார். இவர் 2000 முதல் 2014 வரை மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 123.3 பில்லியன் டாலராகும்.
இந்தியா மற்றும் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவரின் மொத்த சொத்து மதிப்பு 117.5 பில்லியன் டாலராகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், உலகின் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையை இயக்கி வருகிறது, அதே நேரத்தில் அவரது தொலைத்தொடர்பு முயற்சியான ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது.
லாரி பேஜ்
அமெரிக்க கோடீஸ்வரரும் தொழிலதிபருமான லாரி பேஜ் இந்த பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறார். இவர் செர்ஜென் பிரின் உடன் இணைந்து கூகுள் நிறுவனத்தை நிறுவினார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 115.1 பில்லியன் டாலராகும்.