கிராம நத்தம் நிலத்திற்கு ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்யலாம்! புதிய வழிமுறையை எப்படி?

By SG BalanFirst Published Mar 5, 2024, 9:06 PM IST
Highlights

கிராம நத்தம் மற்றும் நகரப்புற நத்தம் நிலத்தில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது. இதன் மூலம் அரசு வழங்கிய பட்டா அடிப்படையில், நில உரிமையை முழுமையாகப் பெற வாய்ப்பு உருவாகி உள்ளது.

கிராம மக்கள் தங்களிடம் உள்ள நத்தம் வீட்டுமனைக்கு பட்டா பெறுவதில் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக இணையவழி பட்டா மாறுதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தள்ளார்.

நத்தம் நில ஆவணங்களை இணையவழி சேவைக்கு கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நத்தம் நிலங்களில் பட்டா மாறுதல் செய்வது, உட்பிரிவு செய்வது ஆகியவை தொடர்பான மனுக்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். பொது சேவை மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

இதனால் எந்த நேரத்தில் எந்த இடதிதல் இருந்தாலும் ஆன்லைன் முறையில் நத்தம் அ-பதிவேடு, சிட்டா மற்றும் புல வரைப்படங்கள் போன்ற ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

வெறும் 20 ரூபாய்க்கு 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ்! மத்திய அரசு வழங்கும் காப்பீட்டை மிஸ் பண்ணாதீங்க!

திங்கட்கிழமை மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மிக முக்கியமான திட்டத்தை இங்கே தொடங்கி வைத்திருக்கிறேன். அதற்கு 'நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்' என்று பெயர். கிராமப்புற மக்கள் நத்தம் வீட்டுமனை பட்டா பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்ணு வருவதாகத் தெரியவந்தது. இதை எளிமையாக்கும் இந்தத் திட்டம் புரட்சிகரமான திட்டம்" என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு வருவாய்த்துறை வரலாற்றில், கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலமாக வழங்குவது இதுதான் முதல்முறை எனவும் முதல்வர் சுட்டிக்காட்டினார். "'காணி நிலம் வேண்டும்' என்று பாரதியார் பாடினார். அதைக் கணினி மூலமாக உறுதி செய்கின்ற திட்டம் இது. முதல்கட்டமாக, 75 லட்சத்து 33 ஆயிரத்து 102 பட்டாதாரர்கள் இந்த இணையவழி சேவை மூலமாக பயன்பெற போகிறார்கள்" என்றார்.

2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அப்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நத்தம் நிலங்களுக்கு இணையவழி பட்டா மாறுதல் முறை விரைவில் கொண்டுவரப்படும் என அறிவித்தார். அதன்படி 'நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்' இப்போது நடைமுறைக்கு வருகிறது.

கிராம நத்தம் நில பட்டாக்கள் புறம்போக்கு நிலங்களாக கருதப்படுவதால், அந்த நிலங்களை அனுபவ ஸ்வாதீன இடங்களாக கருதி, பல ஆண்டுகளாக அங்கு மக்கள் வாழும் மக்களுக்கு வழங்க 1991ல் முடிவு செய்யப்பட்டது. அந்தப் பட்டாக்கள் இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தன.

பின்னர், அவற்றை கணக்கீட்டு ஆன்லைனில் பதிவு செய்யும் முறை தொடங்கியது. இப்போது ஆன்லைனிலேயே நத்தம் பட்டா மாறுதல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இது தொடர்பான வழிகாட்டல் விரைவில் நிர்ணயம் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் கிராம நத்தம் மற்றும் நகரப்புற நத்தம் நிலத்தில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது. இதன் மூலம் அரசு வழங்கிய பட்டா அடிப்படையில், நில உரிமையை முழுமையாகப் பெற வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதற்கு eservices.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அடையாளச் சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களுன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம நத்தம் நிலத்தை குடியிருப்புகளாக மட்டுமே பயன்படுத்த முடியும். வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தி யாத்திரையில் 'மோடி மோடி' என்று முழக்கமிட்ட பாஜக தொண்டர்கள்!

click me!