
இந்திய ரிசர்வ் வங்கியின் 18வது கவர்னராக இருந்தவர் எஸ் வெங்கிடரமணன். இவர் 1999 ஆம் ஆண்டில் இருந்து 1992 ஆம் ஆண்டு வரை கவர்னராக இருந்தார். 1985 ஆம் ஆண்டு முதல் 1989 வரை மத்திய நிதித்துறை செயலாளராக இருந்தவர்.
இன்று காலை சென்னையில் காலமான இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவர்தான் தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன். திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்த நாகர்கோவிலில் பிறந்தார் வெங்கிடரமணன்.
இந்திய ரிசர்வ் வங்கியின் 18வது கவர்னராக இருந்தவர் எஸ் வெங்கிடரமணன். இவர் 1999 ஆம் ஆண்டில் இருந்து 1992 ஆம் ஆண்டு வரை கவர்னராக இருந்தார். 1985 ஆம் ஆண்டு முதல் 1989 வரை மத்திய நிதித்துறை செயலாளராக இருந்தவர். கர்நாடகா அரசின் ஆலோசகராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் கவர்னராக இருந்தபோது, திறமையானவர் என்று ஆர்பிஐ இவரை அங்கீகரித்து இருந்தது.
Google Pay, Paytm, PhonePe யூசரா நீங்கள்.. இந்த தேதிக்குள் இதை பண்ணுங்க.. இல்லைனா அவ்ளோதான்.!!
இவரது திறமையான அணுகுமுறை, பணம் செலுத்துவதில் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து நாட்டை வழி நடத்தி சென்றது என்று இவரது ஆளுமை சிறந்ததாக இருந்தது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக வெங்கிடரமணன் இருந்தபோது சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்படுத்தல் திட்டத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்த காலகட்டத்தில் ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டது.
ஓய்வுக்குப் பிறகும், அசோக் லேலண்ட் இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் லிமிடெட், நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் அசோக் லேலண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் தலைவராக வெங்கிடரமணன் பணியாற்றினார். மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஸ்பிக், பிரமல் ஹெல்த்கேர் லிமிடெட், தமிழ்நாடு வாட்டர் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப். லிமிடெட் ஆகியவற்றின் வாரியங்களிலும் பொறுப்புகளில் இருந்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.