UPI மூலம் தவறாக பணம் அனுப்பிட்டீங்களா? அப்ப உடனே இதை செய்யுங்க.. எளிதில் பணத்தை திரும்ப பெறலாம்..

By Ramya s  |  First Published Nov 16, 2023, 10:11 AM IST

UPI மூலம் தவறாக அனுப்பப்பட்ட பணத்தை எப்படி திரும்பப் பெறுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


இன்றைய டிஜிட்டல் பேமெண்ட் உலகில், UPI என்பது பணத்தை சிரமமின்றி மாற்றுவதற்கான எளிய செயல்முறையாகும். UPI மூலம், சில நொடிகளில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால் தற்போது அதிகமான UPI  மூலம் பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் என பல UPI செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும், சில நேரங்களில் UPI மூலம் பணம் அனுப்பும் போது தவறுதலாக தவறான நபருக்கு பணத்தை அனுப்பிவிடலாம். இது போன்ற சூழலில் UPI மூலம் தவறாக அனுப்பப்பட்ட பணத்தை எப்படி திரும்பப் பெறுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பெறுநரைத் தொடர்புகொள்ளவும்: Paytm மற்றும் GPay போன்ற UPI செயலிகளில் குறுஞ்செய்தி அனுப்பும் இடத்தில் பெறுநரைத் தொடர்புகொண்டு, தவறாக அனுப்பப்பட்ட பணம் குறித்து, அந்த பணத்தை திருப்பி அனுப்ப சொல்லி மெசேஜ் அனுப்பலாம்.. மாற்றாக, உங்களிடம் அவர்களின் எண் இருந்தால், அவர்களை அழைத்து, பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்கலாம்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்: பெறுநரைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், உங்கள் வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முயற்சிக்கவும். நீங்கள் வாடிக்கையாளர் சேவையை அணுகலாம் அல்லது தேவையான அனைத்து சான்றுகளுடன் அருகிலுள்ள வங்கி கிளைக்குச் செல்லலாம். தவறான UPI பரிவர்த்தனை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களின் துல்லியத்தைப் பொறுத்து உங்களுக்கு பணம் திருப்பி அனுப்பப்படும். எனினும் அதற்கு 45 நாட்கள் ஆகலாம்.

வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளவும்: UPI செயலிகள் சிறந்த வாடிக்கையாளர் பராமரிப்புச் சேவைகளை வழங்குகின்றன, மேலும் உங்கள் வங்கி உங்களுக்கு உதவ முடியாவிட்டால், பணத்தைப் பெற்றவர் அதைத் திருப்பித் தர ஒப்புக்கொள்ளவில்லை அல்லது பெறுநரைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால் UPI வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம். . UPI செயலியின் வாடிக்கையாளர் பராமரிப்பு ஆதரவைத் தொடர்புகொண்டு அவர்களிடம் உதவி கேட்கலாம் என்று ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகிறது. 24 முதல் 48 மணி நேரத்திற்குள் பணத்தைத் திருப்பித் தருமாறு அவர்களிடம் கோரலாம். மேலும், உங்களுடைய வங்கியும் பெறுநரின் வங்கியும் ஒன்றாக இருந்தால் விரைவிலேயே பணத்தை திரும்ப பெறலாம்.

வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆதார் எண்ணுடன் எல்பிஜி இணைப்பை எளிதாக இணைக்கலாம்!

NPCI போர்ட்டலில் சிக்கலைப் புகாரளிக்கவும்: தவறான நபருக்கு UPI மூலம் பணம் அனுப்பியது வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்வதும் உதவவில்லை என்றால், NPCI போர்ட்டலில் சிக்கலைப் புகாரளிக்கவும். தவறான பரிவர்த்தனைக்கான சரியான ஆதாரத்தை நீங்கள் இணைக்க வேண்டும். https://www.npci.org.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, “What we do" என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் கிடைக்கும் விருப்பங்களில் இருந்து "UPI" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, "Complaint Section” என்பதை கிளிக் செய்து, பரிவர்த்தனையின் தன்மை, வங்கி பெயர், UPI ஐடி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் போன்ற பரிவர்த்தனை விவரங்களை நிரப்பவும்.

இதற்குப் பிறகு, "issue" என்பதை கிளிக் செய்து “Incorrectly transferred to the wrong UPI address" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மேலும், தவறான பரிவர்த்தனையைக் காட்டும் உங்கள் வங்கி அறிக்கை போன்ற சரியான ஆதாரத்தை இணைக்கவும். 30 நாட்களுக்குப் பிறகும் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால், கூடுதல் உதவிக்கு நீங்கள் வங்கி குறைதீர்ப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.

click me!