ஜீரோ பார்த்துக்கோங்க.. பெட்ரோல் போடும் பொது அதை மட்டும் கவனித்தால் போதுமா? போதாது இதையும் கவனிக்கணுமாம்!
Petrol Diesel Station : இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விற்கும் விலைக்கு அதை மிக சிக்கனமாக பயன்படுத்தும் நிலையில் மக்கள் உள்ளனர். ஆனால் இன்றளவும் ஒரு சில பெட்ரோல் டீசல் நிலையங்களில் பயனர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு தான் வருகின்றனர்.
Petrol Diesel station
பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில் நமது வண்டியில் எரிபொருளை நிரப்புவதற்கு முன்பாக அந்த எரிபொருளை நிரப்புபவர் நம்மை ஜீரோ பார்த்துக்கொள்ள கூறுவதை நாம் அடிக்கடி கேட்டு இருப்போம். உண்மையில் அது ஒரு நல்ல விஷயம் தான் என்றாலும் ஆனால் அது மட்டுமே பெட்ரோல் திருட்டு நடக்காமல் இருக்க உதவாது.
பர்சனல் லோன் எடுக்க போறீங்களா? விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கி.. உஷாரா இருங்க மக்களே..
Petrol Diesel Pump
வாகனத்தில் எரிபொருள் நிரப்பும் முன், ஜீரோவை சரி பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். அதாவது ஜீரோவில் மீட்டர் இருந்தும் நமக்கு குறைவான அளவில் எரிபொருள் நிரப்பப்படுகிறது என்கின்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால், விநியோக இயந்திரத்தின் சரிபார்ப்பு சான்றுகளை காட்டுமாறு நீங்கள் அந்த நிறுவனத்திடம் கேட்கலாம்.
Diesel station
அதற்கு நமக்கு உரிமை உண்டு, அது மட்டும் அல்லாமல் அங்கு இருக்கும் 5 லிட்டர் அளவுகோலை பயன்படுத்தி சரியான அளவில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதா என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் அதை மீறியும் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பெட்ரோல் அல்லது டீசல் நிலையத்தின் மீது சந்தேகம் இருக்கிறது என்றால், நுகர்வோர் சட்ட அளவியல் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். அல்லது தேசிய நுகர்வோர் உதவி எண்ணான 1915ல் உங்களுடைய புகார்களை பதிவு செய்யலாம்.