இந்த காரணங்களுக்காக PF பணத்தை முன்கூட்டியே எடுக்கலாம்.. நிபந்தனைகள் என்னென்ன?

By Ramya s  |  First Published Nov 16, 2023, 12:01 PM IST

பிஎஃப் பணத்தை அவசர காலத்தில் திரும்ப எடுப்பது குறித்தும் அதற்கான விதிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.


பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையாகும். நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகையும், பணியாளர் சார்பில் குறிப்பிட்ட தொகையும் மாதம் மாதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்படி 12% வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த தொகையை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இந்த சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

ஓய்வு காலத்தில் பெறும் ஓய்வூதிய நன்மைகள் தவிர பல்வேறு நன்மைகள் பிஃப் மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கின்றன. எனினும் இதுபற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அந்த வகையில் பிஎஃப் பணத்தை அவசர காலத்தில் திரும்ப எடுப்பது குறித்தும் அதற்கான விதிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பிஃப் பணம் எடுப்பதற்கான விதிகள்

ஓய்வுக்குப் பிறகே பிஎஃப் தொகையை திரும்பப் பெறுவதே நிலையான நடைமுறையாக இருந்தாலும், EPF கணக்கிலிருந்து முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கப்படும் குறிப்பிட்ட சூழ்நிலைகள் உள்ளன. EPFO வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக சில அவசரநிலைகள் அல்லது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்கூட்டியே பணத்தை  திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படுகிறது.

EPFல் இருந்து பணம் எடுக்க பல விதிகள் உள்ளன. நீங்கள் உங்கள் வேலையை மாற்றினால், உங்கள் EPF கணக்கிலிருந்து எளிதாக பணத்தை எடுக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் முடியாது. வேலையை விட்டு நின்று, இரண்டு மாதங்கள் வேறு வேலையில் சேரவில்லை என்றால் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். அதே போல் உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும் போது மட்டுமே பணத்தையும் மாற்ற முடியும்.

EPF பணத்தை முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகள் என்னென்ன?.

வேலையின்மை

பிஎஃப் பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கும் நிபந்தனைகளில் வேலையின்மையும் ஒன்றாகும். ஒரு EPF சந்தாதாரர் ஒரு மாதத்திற்கு வேலையில்லாமல் இருந்தால், அவர்கள் தங்கள் EPF நிதியில் 75 சதவிகிதம் வரை எடுக்கலாம். இரண்டு மாத வேலையின்மைக்குப் பிறகு, மீதமுள்ள 25 சதவீதத்தை அவர்கள் திரும்பப் பெறலாம்.

கல்வி மற்றும் திருமணம்

ஒரு பிஎஃப் உறுப்பினர், தனது பிஃப் கணக்கை தொடங்கி ஏழு வருடத்திற்கு பிறகு, கல்விச் செலவுகளுக்காக பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுக்கலாம். மேலும் பிஎஃப் உறுப்பினரின் உடன்பிறந்தவர்கள், குழந்தைகள் அல்லது குறிப்பிட்ட உறவினர்களின் திருமணச் செலவுகளுக்காக தனது பங்கில் 50 சதவீதம் வரை பணம் திரும்பப் பெறலாம்.

வீடு வாங்குதல் அல்லது கட்டுமானம்

ஒரு புதிய வீட்டை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, பிஎஃப் சந்தாதாரர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் பணம் எடுக்க EPFO அனுமதிக்கிறது.

வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல்

இபிஎஃப் திட்டத்தில் மூன்று ஆண்டுகள் பங்களிப்பு செய்த பிறகு, வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பணத்தைப் பெறலாம். EPFO உறுப்பினர் ஒரு வீட்டை வாங்குவதற்கு முன்பணம் செலுத்துவதற்காகவோ அல்லது வீட்டுக் கடனுக்கான EMIகளை செலுத்துவதற்காகவோ திரட்டப்பட்ட நிதியில் 90% வரை திரும்பப் பெறலாம்.

15x15x15 ஃபார்முலா தெரியுமா? 15 வருடத்தில் ஒரு கோடியாக மாறும் ஸ்மார்ட் முதலீட்டுத் திட்டம்!

மருத்துவ அவசரநிலைகள்

மருத்துவ அவசரநிலைகளில், பிஎஃப் பணத்தில் தங்கள் பங்குக்கு சமமான நிதியை வட்டியுடன் அல்லது அவர்களின் மாத சம்பளத்தின் ஆறு மடங்கு தொகையுடன் எடுக்கலாம். இது சுய, பெற்றோர், மனைவி அல்லது குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.

நீண்ட கால சேமிப்புத் திட்டமான PF, ஓய்வுக்குப் பிந்தைய தேவைகளை ஆதரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு விதிவிலக்குகள் இருந்தாலும், நிலையான மற்றும் பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை உறுதிப்படுத்த அவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!