தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது.
தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,280ஆகவும், சவரன், ரூ.42,240ஆகவும் இருந்தது.
தங்கம் விலை குறைவு| வாரத்தின் முதல்நாளே இன்ப அதிர்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூ.5,275ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 200ஆகக் வீழ்ந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,275க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாகக் குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் வரும் மார்ச் மாதத்தில்வட்டியை 50 புள்ளிகள் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் உலகச் சந்தைகளில் பெரும் ஊசலாட்டம் நிலவி வருகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பங்குப்பத்திரங்கள், கடன்பத்திரங்களில் திருப்பத் தொடங்கியதால், தங்கம் விலை படிப்படியாகக் குறைந்துள்ளது.
தங்கம் விலை அதிரடி உயர்வு| சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு: நிலவரம் என்ன?
இருப்பினும் தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் வராமல் இருந்துவருவது நகைப்பரியர்களுக்கு வருத்தமான செய்திதான்.
வெள்ளி விலை இன்று மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.71.70 ஆகவும், கிலோ ரூ.71,700 ஆகவும் மாற்றில்லாமல் இருக்கிறது.