NITI Aayog CEO:நிதிஆயோக் சிஇஓ-வாக முன்னாள் வர்த்தகச் செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம் நியமனம்: யார் இவர்?

Published : Feb 21, 2023, 09:31 AM IST
NITI Aayog CEO:நிதிஆயோக் சிஇஓ-வாக முன்னாள் வர்த்தகச் செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம் நியமனம்: யார் இவர்?

சுருக்கம்

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக முன்னாள் வர்த்தகச் செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக முன்னாள் வர்த்தகச் செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக் சிஇஓவாக  இருந்த பரமேஸ்வரன் ஐயர் வாஷிங்டன் டிசியில் உலக வங்கியில் நிர்வாக அதிகாரியாகப் பணியில் இணைய உள்ளார். 

இந்தியா-ஆஸி.டெஸ்ட்| அகமதாபாத் போட்டியை ஆஸ்திரேலியப் பிரதமருடன் சேர்ந்து பார்க்கும் பிரதமர் மோடி

கடந்த 1987ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரமணியம் சத்தீஸ்கர் கேடர் அதிகாரி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வர்த்தகச் செயலாளர் பதவியிலிருந்து சுப்ரமண்யம் ஓய்வு பெற்றநிலையில் இப்போது நிதிஆயோக் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். 

வர்த்தகச் செயலாளராக சுப்ரமணியம் இருந்தபோது, கொரோனாவுக்குப்பின் உலகளவில் பொருளாதாரம் தடுமாறியபோது,  இந்தியாவின் வர்த்தகத்தில் குறிப்பாக ஏற்றுமதியை 42200 கோடி டாலருக்கு கொண்டு செல்ல, செயல்திட்டத்தை அமைத்துக் கொடுத்தார். 

ஏறக்குறைய 6 நாடுகளுடன்தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்த சுப்ரமணியம் தூண்டுகோலாக இருந்தார். சுப்ரமணயிம் காலத்தில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா நாடுகளுடன் இரு பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளராகவும் சுப்ரமணியம் பதவி வகித்துள்ளார்.

லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் நிர்வாகப் பட்டம் பெற்ற சுப்ரமணியம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தனிச்செயலாளராகவும் இருந்தார். 

அதானி சொத்து 5000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது|30 நாட்களுக்குமுன் 3வது இடம்!இப்போ 25!

நிதிஆயோக் சிஇஓவாக இருந்த பரமேஸ்வரன் ஐயர் 1981ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி, உத்தரப்பிரதேச கேடரைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு நிதிஆயோக் சிஇஓவாக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், உலக வங்கிப் பணிக்காக அழைப்பு வந்ததையடுத்து, நிதிஆயோக் சிஇஓ பணியிலிருந்து விடைபெற்றார். 2016 முதல் 2020ம் ஆண்டு மத்திய குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு பிரிவின் இயக்குநராக இருந்தார்.

2009ம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கிப்பணியில் இணைந்தார். உலகளவில் சுத்தமான குடிநீரை மக்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை பரமேஸ்வரன் ஐயர் வழிநடத்தினார். 2016ம் ஆண்டு மத்திய அரசு அழைப்பின் பெயரில் ஸ்வச்பாரத் மிஷன் திட்டத்துக்காக பரமேஸ்வரன் ஐயர் வந்தார். 2020ம்ஆண்டு தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பதவியிலிருந்து விலகினார்.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?