TCS Milind Lakkad: சிறந்த ஸ்டார்ட்அப் ஊழியர்களைக் தேடிப் பிடித்து வேலை கொடுக்கும் டிசிஎஸ்!

By SG Balan  |  First Published Feb 20, 2023, 11:46 AM IST

டிசிஎஸ் நிறுவனம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்து திறமையானவர்களை வேலைக்குச் சேர்க்க உள்ளதாக மிலிந்த் லக்காட் கூறியுள்ளார்.


டாடா குழும நிறுவனமான டிசிஎஸ் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அந்நிறுவனம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சிறப்பாகச் செயல்படும் திறமையான ஊழியர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் பணி வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் தலைவர் மிலிந்த் லக்காட் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். உலகெங்கிலும் உள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல காரணங்களுக்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நேரத்தில் லக்காட் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

Tap to resize

Latest Videos

“ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் நீக்கப்பட்ட திறமையான ஊழியர்களை, அதிலும் குறிப்பாக கல்வி, தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களை, வேலையில் சேர்க்கத் தயாராக இருக்கிறோம்” என்று லக்காட் தெரிவித்துள்ளார்.

OTP மெசேஜ்க்கும் கட்டணம்! Twitter பயனர்களுக்கு எலான் மஸ்க் விளக்கம்!!

பெரிய நிறுவனங்கள் ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து கேட்டதற்கு பதில் கூறிய அவர், “நாங்கள் அதைச் செய்யமாட்டோம். எங்கள் நிறுவனத்தில் திறமையானவர்களை வளர்ப்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு அதிகமாகவே ஊழியர்களை பணியமர்த்திவிடுவதால்தான் பணிநீக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது என்றும் லக்காட் கூறினார். அதே நேரத்தில் ஓர் ஊழியரைப் பணியில் சேர்த்தால், அவர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நிறுவனத்துக்கு உள்ளது என்ன டிசிஎஸ் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

தேவைப்படும் திறன்களுக்கும் ஊழியரின் திறனுக்கும் இடையே இடைவெளி இருப்பது தெரிந்தால், பணியாளர்களுக்கு அதிக நேரத்தைக் கொடுத்து பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துவோம் என்றும் லக்காட் கூறினார்.

Google Layoffs: ஒரே மெயிலில் நூற்றுக்கணக்கான இந்தியர்களை பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரியும் நிலையில், நடப்பு ஆண்டிலும் முந்தைய ஆண்டுகளைப் போலவே சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது, டிசிஎஸ் நிறுவன ஊழியர்களில் 70 சதவீதம் பேர் அமெரிக்கர்கள். இதனை 50 சதவீதமாகக் குறைக்க இருக்கிறோம்.  அதன் மூலம் இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கும் உலகளாவிய வாய்ப்புகளை வழங்க விரும்புகிறோம். ஆனால், அதற்கு பிசினஸ் மற்றும் H1 விசாக்களுக்கு விரைவாக அனுமதி தேவை அளிக்கப்படுவது அவசியம்” எனவும் கூறினார்.

GST Council: ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.16,982 முழுமையாக விடுவிப்பு - நிர்மலா சீதராமன்

click me!