இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவில் முடிந்தன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.
இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவில் முடிந்தன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.
அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் வட்டிவீத்தை 50 புள்ளிகள் வரை உயர்த்தும் என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் கடந்த சிலநாட்களாக சந்தையில் ஊசலாட்டமான போக்கு காணப்படுகிறது.ஆசியப் பங்குச்சந்தைகளும் இன்று சரிவுடன் முடிந்தன.
அதிக பென்சன் பெற தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழிகாட்டு விதிகள்: இபிஎப்ஓ
காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரையிலும், தேசியப் பங்குச்சந்தையில் 50 புள்ளிகள் வரையிலும் உயர்ந்தது. ஆனால், சிறிது நேரத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் மளமளவெனச் சரிந்தது. இந்த சரிவு மாலை வரைத் தொடர்ந்தது. வர்த்தகத்தின் இடையே சந்தை மீண்டு வந்தாலும் அது நிலைக்கவில்லை, தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் ஊசலாட்டத்துடனே காணப்பட்டது.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 19 புள்ளிகள் சரிந்து, 60,672 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் 18 புள்ளிகள் குறைந்து, 17,826 புள்ளிகளில்நிலைபெற்றது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 13 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும், மற்ற 17 நிறுவனங்களின் பங்குகள் சரிவிலும் உள்ளன. என்டிபிசி, லார்சன்அன்ட்டூப்ரோ, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ரிலையன்ஸ், எச்டிஎப்சி, ரிலையன்ஸ், உள்ளிட்டபங்குகள் விலை உயர்ந்தன.
பங்குச்சந்தையில் ஊசலாட்டம்| சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்ற இறக்கம்! அதானி பங்கு சரிவு
நிப்டியில் என்டிபிசி, பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட், டாடா ஸ்டீல் பங்குகள் விலை உயர்ந்தன. அதானி என்டர்பிரைசர்ஸ், அப்பலோ மருத்துவமனை, கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ பங்குகள் விலை குறைந்தன.
நிப்டியில் பொதுத்துறை வங்கி, ரியல்எஸ்டேட் பங்குகள் ஒரு சதவீதம் சரிந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், மருத்துவத்துறை, ஐடி பங்குகள் விலை உயர்ந்தன