2000 ரூபாய் பரிமாற்றத்திற்கான காலக்கெடு குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாததாக்கப்பட்டது, இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அப்போது பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் தற்போது புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதையடுத்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ரூபாய் 2000 நோட்டுகள் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!
இதுகுறித்து ஏற்கனவே பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “திரும்பப்பெறும் உத்தரவை பிறப்பித்த ஒரு மாதத்திற்குள், 2,000 ரூபாய் கரன்சி நோட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என்றும், மார்ச் 31ஆம் தேதி வரையில் சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் (50 சதவிகித நோட்டுகள்) திரும்பி வந்துள்ளன ஏறணும் கூறினார்.
மேலும் 85 சதவீதம் டெபாசிட்டாகவும் மீதமுள்ளவை வேறு நோட்டுகளாகவும் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ஆம் நிலவரப்படி, 3.62 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இதில், 2.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு மேல் நீட்டிப்பது தற்போது பரிசீலனையில் இல்லை என்று அரசு இன்று தெரிவித்துள்ளது. மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) படி, புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 84 ஆயிரம் கோடி ரூபாய்.
கடந்த மாதம் 3ம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 2000 ரூபாய் மதிப்பு 2.51 சதவிகிதம் என்றும் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்புள்ள கரன்சி ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள் வடிவில் கிடைக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hero Bikes : ரூ.57 ஆயிரத்துக்கு கிடைக்கும் பைக்குகள்.. வேற மாறி ஆஃபர் - முழு விபரம் இதோ !!