எகிறி அடிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குகள்; 5 ஆண்டுகளில் 394.72% மதிப்பு உயர்வு!!

By Dhanalakshmi G  |  First Published Jul 24, 2023, 12:00 PM IST

அர்ஜென்டினாவுக்கு ஹெலிகாப்டர் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பெற்றுள்ளது. 


ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குகளின் மதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் அர்ஜென்டினாவுடன் ஹெலிகாப்டர் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ரூ. 82,000 கோடி ஆர்டர் பெற்ற இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு வேகமாக உயர்ந்து வருவதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், அர்ஜென்டினாவின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து இலகுரக மற்றும் நடுத்தர பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்குவதற்கான ஆர்டர்  பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பங்குச் சந்தைக்கும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை அர்ஜென்டினா ஆயுதப் படைகளுக்கு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வழங்கும். முன்னதாக ஜூலை 7,  2023 அன்று, டோர்னியர் விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகத்துடன் கையெழுத்திட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வாரியம் பங்குகளை பிரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முகமதிப்பு ரூ.10 பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 5 முக மதிப்புள்ள பங்குகளாக பிரிக்கப்படும். அதாவது, தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 100 பங்குகளை வைத்திருக்கும் நபர், பங்கு பிரிந்த பிறகு 200 பங்குகளை வைத்திருப்பார். ஈக்விட்டி பங்குகளை பிரிப்பதற்கான பதிவு தேதி வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 29 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

PF Account : பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வட்டி தொகை உயர்வு - முழு விபரம் இதோ !!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் விமானம், ஹெலிகாப்டர்கள், ஏரோ என்ஜின்கள், ஏவியோனிக்ஸ், பாகங்கள் மற்றும் விண்வெளி கட்டமைப்புகள், சேவை உற்பத்தி, வடிவமைப்பு, மேம்பாடு, பழுதுபார்ப்பு, மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பங்குகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு 24 ஜூலை 2020 அன்று ரூ. 909-லில் இருந்து ரூ. 3,854 ஆக உயர்ந்துள்ளது. 

Today Gold Rate in Chennai : தாறுமாறாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை குறைந்தது - எவ்வளவு தெரியுமா?

இன்று காலை 11 மணியளவில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குகள் 1.26 சதவீதம் அல்லது ரூ.48.55 உயர்ந்து ஒவ்வொறு பங்கும் ரூ.3,903.00 ஆக வர்த்தகம் செய்தது. பங்குகள் அதன் முந்தைய முடிவான ரூ.3,854.70க்கு எதிராக ரூ.3,869.95 இல் துவங்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குகள் தற்போது பங்குச் சந்தையில் நன்றாக வர்த்தகம் செய்து வருகிறது. பங்கு மதிப்பு வலுவான நிலையில் 394.72% ஆக அதிகரித்துள்ளது. 

click me!