Explained:தங்க நகையில் 6 இலக்க ஹால்மார்க்; யாருக்கு முக்கியம் ஏன்? எதற்காக?

By Dhanalakshmi GFirst Published Mar 17, 2023, 2:06 PM IST
Highlights

தங்கம் என்பது பெண்களை மட்டும் அழகுபடுத்தவில்லை. ஒவ்வொருவருக்கும் அவசரகாலத்தில் கை கொடுக்கிறது. பணம் தேவைப்படும்போது யாரையும் எதிர்பார்க்காமல் நகையை அடமானம் வைத்து பணம் எடுத்துக் கொள்ள முடிகிறது. எனவே, இது ஒவ்வொருவருக்கும் வீடு, நிலம் போன்று இதுவும் ஒரு  சொத்தைப் போன்றது.

அப்படிப்பட்ட தங்கத்தை எவ்வளவு விலை உயர்ந்தாலும் வாங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். குறிப்பாக தென்னிந்திய மக்கள் தங்க நகைகளை அணிவதில் ஆர்வம் காட்டுவார்கள்.  இதற்கு ஏற்றாற்போல், நகை வடிவமைப்புகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. தங்கம் விலையும் ஏறிக் கொண்டே செல்கிறது. 

ஆனால், வாங்கும் தங்கம் நல்ல தங்கமா? என்பதை எப்படி பார்ப்பது. தெரியாது. கடைக்காரர்களை நம்பி மட்டுமே வாங்க முடியும். அதற்காக வந்து இருப்பதுதான் ஹால்மார்க் சட்ட திருத்தம். இது ஏற்கனவே இருக்கிறது என்றாலும், இது இனிமேல் கட்டாயம் ஆக்கப்படுகிறது. நான்கு இலக்க எண்ணிற்கு பதில் ஆறு இலக்க எண் வரும் 2023, ஏப்ரல் ஒன்றாம் ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த ஹால்மார்க் இருந்தால்தான் அரசு அனுமதித்து இருக்கும் சட்டமுறைப்படி சரியான கலவையில் செய்யப்பட்ட தங்கம் என்பது தெரிய வரும். இது ஒரு ஸ்டாம்பு போன்றது. இதுகுறித்து சமீபத்தில் நுகர்வோர் விவகாரத்துறை கூடுதல் செயலாளர் நிதி காரே, ஹால்மார்க்கின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். 

நல்லா தூங்குங்க.. ஊழியர்களுக்கு லீவ் கொடுத்த நிறுவனம்.. சர்வதேச தூக்க தினத்துக்கு இப்படி ஒரு கிப்ட்

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து வகையான நகைகளிலும் 6 இலக்க எண் இருக்க வேண்டும் அல்லது யுஐ (Unique Identification) இருக்க வேண்டும். நகை வாங்கிய பின்னர் பின்னாட்களில் நகைகளை மாற்ற வேண்டியது இருக்கிறது அல்லது தங்கம் தரமானதாக இல்லை என்று தெரிய வரும்போது, குறிப்பிட்ட நகைக்கடைக்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். தங்கத்தின் தரத்தையும் சோதித்துக் கொள்ளலாம். 

தற்போது நான்கு இலக்க எண்ணில் ஹால்மார்க் தங்க நகை வைத்து இருப்பவர்கள், பயப்பட வேண்டியதில்லை. அவர்கள் தங்களது நகைகளை எந்தவித அச்சமும் இன்றி விற்க வேண்டுமானால், விற்றுக் கொள்ளலாம். ஆறு இலக்க எண் என்பது நகைக் கடைக்காரர்களுக்கு உரியது. அவர்கள் இந்த ஆறு இலக்க ஹால்மார்க் எண் இல்லாமல், வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நகைகளை விற்க முடியாது.  

முன்பு நகை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நான்கு இலக்க எண் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

எப்படி ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு எண் வழங்கப்படுமோ அதேபோல், வாங்கும் நகைகளிலும் வேறு வேறு எண்கள் இருக்கும். 

Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்..இன்றைய தங்கம் & வெள்ளி நிலவரம் என்ன?

இந்த விதியை மீறும் நகைக்கடைக்காரர்களுக்கு நகையின் விலையை விட ஐந்து மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். இருப்பினும், நகைக்கடைக்காரர்கள் நுகர்வோரிடமிருந்து ஹால்மார்க் இல்லாமல் பழைய தங்க நகைகளை திரும்ப வாங்கலாம்.

ஒட்டுமொத்தமாக, ஹால்மார்க் எண் இருக்கும் தங்க நகைகளை வாங்குவது அனைவருக்கும் நல்லது. வெளிப்படைத்தன்மை இருக்கும். நுகர்வோரின் உரிமைகளை உறுதிப்படுத்துகிறது. யார் வேண்டுமானாலும், ஏற்கனவே உள்ள நகைகளை ஹால்மார்க் செய்து தங்கத்தின் உண்மையான மதிப்பீட்டைப் பெறலாம்.

ஹால்மார்க் எண் கொண்ட நகைகளை மறுவிற்பனை அல்லது பரிமாற்றம் செய்யும்போது அதிக மதிப்பை வழங்குகிறது. வாங்கும் தங்கத்தின் தூய்மையையும், தரத்தையும் உறுதி செய்கிறது.

click me!