Explained: வரியே இல்லாமல் பொருளாதாரத்தை ஒர் அரசால் இயக்க முடியுமா? ஏதாவது நாடுகள் இருக்கிறதா?

By Pothy Raj  |  First Published Feb 16, 2023, 3:36 PM IST

மக்கள் மீது வரிவிதிக்காமல், அல்லது குறைந்த அளவு வரிவிதிப்புடன் ஒரு நாடு பொருளாதாரத்தை நடத்திச்செல்ல முடியுமா. சாத்தியமா என்பதை இந்த செய்தி விளக்குகிறது


மக்கள் மீது வரிவிதிக்காமல், அல்லது குறைந்த அளவு வரிவிதிப்புடன் ஒரு நாடு பொருளாதாரத்தை நடத்திச்செல்ல முடியுமா. சாத்தியமா என்பதை இந்த செய்தி விளக்குகிறது

வரியில்லாத நாடு சாத்தியமா

Tap to resize

Latest Videos

உண்மையில், சாத்தியமே…மக்கள் மீது வரிவிதிப்பு இல்லாத, மிகக்குறைந்த வரிவிதிப்புடன் பொருளாதாரத்தைத் நடத்திச்செல்லும் நாடுகள் சில உள்ளன. ஆனால், வரிவிதிப்பு இல்லாமல் பொருளாதாரத்தை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பது எல்லோருக்கும் எழும் கேள்வி. 

மக்கள் மீது வரிவித்து கசிக்கிப் பிழியாமல், வருவாய்தரும் மாற்று இனங்களைக் கண்டறிந்து பொருளாதாரத்தை அந்த நாடுகள் நடத்திச்செல்கின்றன. அந்த நாடுகள் பொருளாதாரத்திலும் சிறப்பாக இருக்கின்றன, மக்களின் வாழ்வாதாரத்தையும் சிறப்பாக வைத்துள்ளன. சுற்றுலா, தொழில் மற்றும் வர்த்தகத்தில் பல்வேறு சலுகைகளை சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வழங்கி பொருளாதாரத்தை இயக்குகிறார்கள்.

அதிகரிக்கும் தங்கக் கடத்தல்! ஆண்டுதோறும் 120 டன்! மின்னுவெதெல்லாம் நல்ல தங்கமா?

எப்படி இயங்குகின்றன

ஐக்கிய அரபு அமீரகம் மக்கள் மீது வரிவிதிப்பு இல்லாத நாடாகும். இந்த நாட்டின் வருவாயில் பெரும்பங்கு கச்சா எண்ணெய் வருவாயில்கிடைக்கிறது. மற்றவற்றை சுற்றுலா மற்றும் தொழில்கள் மூலம் பெருகிறது. மக்கள் மீது வரிவிதிக்காமல் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தரமுடன் வழங்குகிறது.

கச்சா எண்ணெய்
நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு கனிசமாக பங்களிப்பு செய்து, அரசுக்கு போதுமான வருவாயை ஈட்டித் தருகின்றன. இதனால், மக்கள் மீது எந்தவரியும் விதிக்காமல் பொருளாதாரத்தை நடத்த முடிகிறது. 

சுற்றுலா 

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுலா சர்வதேச கவனம் பெறுகிறது. இங்கு வரும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. வரிச்செலுகை, தங்குமிடம் சலுகை, விசாக்கட்டணம் அனைத்திலும் சலுகை அளி்த்து அந்நியச் செலாவணியை ஈர்க்கிறது.

வர்த்தக, தொழில் சலுகை

அடுத்தார்போல் தடையில்லா வர்த்தகம். சர்வதேச நிறுவனங்கள், முதலீட்டாளர்களை ஈர்க்க தடையில்லா, குறைந்த வரிவிதிப்புடன் தொழில் செய்ய வாய்ப்பு வழங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்ல துபாய், அயர்லாந்து நாடுகளும் தொழிலதிபர்கள், சர்வதேச நிறுவனங்களை ஈர்க்க ஏராளமான சலுகைகளை வழங்குகின்றன.

பிபிசி சேனல் இதற்கு முன் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதா? காங்கிரஸ் கதறுவது நியாயமா?

குறைந்த வரி

குறைந்த வரிவிதிப்பில் இருக்கும் மொனாகோ, பெர்முடா நாடுகளும் வங்கித்துறை, நிதிச்சேவை, காப்பீடு, முதலீடு நிர்வாகம் ஆகியவை மூலம் அதிகவருவாயை ஈட்டுகின்றன. அதிகமான சொத்துக்களை உடைய தனிநபர்கள் இந்த நாடுகளில் வசிக்கிறார்கள் என்பது வியப்புக்குரியதுதான். வரிகுறைவால் உள்நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்து, மக்களின் செலவு செய்யும் திறன் அதிகரி்க்கிறது

வெளிநாடுகளில் இருக்கும் மக்கள் இங்கு பணம் அதிகளவில் அனுப்புவதும்நாட்டின் வருவாய்க்கு முக்கியக் காரணமாகும். வரியில்லாமல் பொருளாதாரத்தை நடத்திச்செல்ல வழியாககும். உதாரணமாக பசிபிக் தீவில்இருக்கும் சிறிய நாடான நவுரு தீவு தனது வருவாயில் பெரும்பங்கு வெளிநாட்டில் இருக்கும் தங்கள் மக்கள் உறவுகளுக்கு அனுப்பும் பணத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் பொருளாதாரத்தை இயக்குகிறது. 

சிக்கல்கள்

வரிவிதிப்பு இல்லாமல், குறைவாக வரிவிதிப்பதால் சில சிக்கல்களும் வரும்.அதாவது மக்களுக்கு நல்ல சுகாதார வசதிகள், கல்வி வசதி, அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சிக்கல்ஏற்படும். அவ்வாறு இருக்கும் நாடுகள் ஒரு குறிப்பிட்ட துறையில் இருந்து கிடைக்கும் வருவையை மட்டுமே நம்பி செயல்பட வேண்டியதிருக்கும். சர்வதேச அளவில் ஏற்படும் விலை மாற்றங்கள் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். 


 

click me!