
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்து வருகின்றன.
இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரு நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. ஆனால், நேற்று காலை வர்த்தகத்தில் சரிவுடன் தொடங்கி, பிற்பகுதியில் ஏற்றம் கண்டு உயர்வுடன் முடிந்தது.
மீண்டது பங்குச்சந்தை| சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு:ஐடி, ஆட்டோ பங்குகள் ஜோர்
இந்தியப் பங்குச்சந்தை உயர்வுக்கு 2 முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று சர்வதேச சந்தைச் சூழல் சாதகமாக இருப்பது, அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வந்தநிலையில் தற்போது வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்செக்ஸ், நிப்டி உயர்ந்து வருகிறது. அதிலும் நிப்டி 18ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது.
அமெரி்க்கப் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார மந்தநிலைக்குள் அமெரிக்கப் பொருளாதாரம் செல்லும் என்று முன்பு கணிக்கப்பட்டநிலையில் முன்னேற்றத்தை நோக்கி நகர்வது நம்பிக்கைக்குரியதாகும்.
இந்தியச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துவந்தநிலையில், கடந்த 4 நாட்களாக பங்குகளை ஆர்வத்துடன் வாங்குவது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.
இதனால் காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே பங்குச்சந்தையில் உயர்வான போக்கு காணப்பட்டது. முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதால் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்தன.
காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 357 புள்ளிகள் உயர்ந்து, 61,632 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 101 புள்ளிகள் அதிகரித்து, 18,117 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது
பங்குச்சந்தை| சென்செக்ஸ் 61,000 புள்ளிகளை எட்டியது! நிப்டி ஏற்றம்: ஐடி பங்குகள் லாபம்
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில் 2 நிறுவனப் பங்குகளைத் தவிர 28 நிறுவனப் பங்குகளும் லாபத்தில் உள்ளன. பார்திஏர்டெல், டைட்டன் பங்குகள் சரிந்துள்ளன.
அதானி குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களில் அதானி டோட்டல்கேஸ் பங்கைத் தவிர அனைத்து நிறுவனப் பங்குகளும் உயர்ந்துள்ளன.
நிப்டியில் அனைத்து துறைப் பங்குகளும் ஏற்றத்தில் உள்ளன.உலோகம், ஐடி துறைப் பங்குகள் அதிக லாபத்துடன் நகர்கின்றன.
நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, அப்போலோ மருத்துவமனை, டெக் மகிந்திரா பங்குகள் லாபத்துடன் நகர்கின்றன. எச்டிஎப்சி லைப், எஸ்பிஐ லைப், ஹீரோ மோட்டார், டைட்டன் நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.