புதிய திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் EPFO அலுவலகத்துக்கும் வங்கிக்கும் அலையவேண்டியது இல்லை. உரிய நேரத்தில் ஓய்வூதியம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நாட்டின் எந்த மூலையில் உள்ள எந்த வங்கியில் இருந்தும் ஓய்வூதியப் பணத்தைப் பெறலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) உள்ள பயனாளிகளுக்கு மத்திய அரசு புதிய நற்செய்தியை வழங்கியுள்ளது. மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகளுக்கு மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் முறைக்கு (Centralized Pension Payment System) மத்திய அரசு இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் நாட்டின் எந்த வங்கியிலும், எந்த கிளையிலும், எந்த மாநிலத்திலும் ஓய்வூதியம் பெறலாம்.
undefined
இந்தத் திட்டம் 2025 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. புதிய CPPS முறையில், ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத்தின்போது சரிபார்ப்புக்காக எந்த வங்கிக் கிளைக்கும் செல்ல வேண்டியதில்லை. ஓய்வூதியம் பெறுவோர், குறிப்பிட்ட கிளைக்குச் சென்று, ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு இது தீர்வாக அமைந்துள்ளது.
Unified Pension Schemes: பொருளாதாரத்திற்கான மோடி அரசின் ஓய்வூதியத் திட்டம்!!
புதிய முறையில், ஓய்வூதியம் வந்ததும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஓய்வூதியம் பெறுபவர்கள் எந்த வங்கியிலும் இந்தப் தங்கள் பென்ஷன் தொகையைப் பெறலாம்.
மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் வழங்கும் முறையானது 78 லட்சத்திற்கும் அதிகமான EPFO EPS ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக மேம்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி தொழில்நுட்பத்தைப் மத்திய அரசு பயன்படுத்துகிறது. வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியிருந்தவர்கள் ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் திரும்ப இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
புதிய முறையால் ஓய்வூதியதாரர்கள் தங்கள் பணத்தைப் பெறுவதற்கான நடைமுறை எளிதாகப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசின் நிதிச்சுமையும் குறையும். இத்திட்டம் நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பின் அமலுக்கு வரும் திட்டமாகும். ஓய்வூதியதாரர்களின் பல நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். புதிய ஏற்பாடுகள் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய முறை அரசு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உதவியாக உள்ளது என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார். இத்திட்டம் புத்தாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்குப் பிறகு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையும் அமல்படுத்தப்படும் என மன்சுக் மாண்டவியா கூறினார்.
இந்தப் புதிய திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் EPFO அலுவலகத்துக்கும் வங்கிக்கும் அலையவேண்டியது இல்லை. உரிய நேரத்தில் ஓய்வூதியம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நாட்டின் எந்த மூலையில் உள்ள எந்த வங்கியில் இருந்தும் ஓய்வூதியப் பணத்தைப் பெறலாம்.
ரூ.50 லட்சம் வீட்டுக்கடனை இந்த முறையில் செலுத்தினால் ரூ.20 லட்சம் சேமிக்க முடியும்!!
37 பில்லியன் டாலர் லாபத்தைக் குவித்து மாயமான ரஷ்ய நிறுவனம்!!