ரூ.50 லட்சம் வீட்டுக்கடனை இந்த முறையில் செலுத்தினால் ரூ.20 லட்சம் சேமிக்க முடியும்!!

By SG Balan  |  First Published Sep 3, 2024, 11:54 AM IST

ரூ.50 லட்சம் வீட்டுக் கடனை 10 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தினால், வட்டியில் ரூ.20 லட்சத்துக்கு மேல் சேமிக்கலாம். 20 ஆண்டுகளில் செலுத்தும்போது கொடுக்கும் வட்டியில் பாதிக்கும் குறைவாகச் செலுத்தினால் போதும்.


சொந்த வீடு என்ற கனவை நனவாக்க அதிக அளவு பணம் தேவைப்படும். ஒரு சிறிய வீடுக்குக்கூட லட்சக்கணக்கில் செலவாகும். இதனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்க வேண்டியுள்ளது.

கடன் வாங்கி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், சரியான திட்டமிடல் இல்லாமல் கடன் வாங்கினால், EMI கட்டுவது ஒரு சுமையாக இருக்கும். அதிக வட்டி செலுத்த வேண்டிய நிர்பந்தமும் உண்டாகும்.

Tap to resize

Latest Videos

undefined

நீண்ட நாட்களாக கடனைச் செலுத்திக்கொண்டிருந்தால், வட்டியாகவே லட்சக்கணக்கில் செலுத்தி நஷ்டம் அடைய நேரிடம். அதனால்தான் வீட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்த ஒரு திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். அதுவும் குறைந்த காலத்திற்குள் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும். இதன் மூலம் கூடுதலாகக் கொடுக்கும் வட்டியை சேமிக்கலாம். அது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

வீட்டுக் கடன் வாங்கும்போது காலக்கெடு அதிகமாக இருந்தால், வட்டிச் சுமை அதிகமாக இருக்கும். நீங்கள் ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பொதுவாக வங்கிகள் 9 சதவீதத்துக்கும் குறைவான வட்டியில்தான் வீட்டுக்கடன் வழங்குகின்றன.

லாபத்தைக் குவித்த ரஷ்ய நிறுவனம் திடீர் மாயம்! மர்மாக மறைந்த 37 பில்லியன் டாலர்!!

10 வருடத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடிவு செய்தால், ரூ.26 லட்சம் வரை வட்டி செலுத்த வேண்டும். இதேபோல், 15 வருட கடன் காலத்தை தேர்வு செய்தால், ரூ.41 லட்சமும், 20 ஆண்டுகள் என்றால், ரூ.58 லட்சமும் வட்டி செலுத்த வேண்டும். இதனால், குறைந்த காலத்திற்குள் கடனைச் செலுத்திவிட்டால் வட்டியில் பெருமளவு சேமிக்கலாம்.

ரூ.50 லட்சம் வீட்டுக் கடனை 10 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தினால், வட்டியில் ரூ.20 லட்சத்துக்கு மேல் சேமிக்கலாம். 20 ஆண்டுகளில் செலுத்தும்போது கொடுக்கும் வட்டியில் பாதிக்கும் குறைவாகச் செலுத்தினால் போதும்.

கடன் காலம் குறைவாக இருந்தால், மாதாந்திர EMI அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் EMI தொகை 5 சதவிகிதம் அதிகரித்தால், 8 ஆண்டுகளுக்கு முன்பே கடனைத் திருப்பிச் செலுத்திவிடலாம். இதுவே EMI தவணைத் தொகை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் கூடினால், கடனை 10 ஆண்டுகளுக்குள் செலுத்திவிடலாம்.

சம்பளம் அல்லது வருமானம் அதிகரிக்கும் போதெல்லாம் EMI ஐ அதிகரிப்பது வட்டி சுமையைக் குறைக்கும். மேலும், வங்கிகள் அதிக அளவு கடன் வாங்கும்போது காப்பீடு எடுக்கவும் பரிந்துரைக்கின்றன. குறைவான EMI செலுத்தினால் காப்பீட்டின் கவரேஜ் குறைக்கப்படும். கடன் கொடுக்கும் வங்கியைத் தவிர வேறு நிறுவனத்திடம் இருந்து காப்பீடு எடுத்தால், கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் காப்பீட்டின் பலனைப் பெறலாம்.

அள்ள அள்ளப் பணம்... 5 வருட பிக்ஸட் டெபாசிட்டில் தாராளமான வட்டி கொடுக்கும் வங்கிகள்!

click me!