வரலாறு காணாத உச்சம் தொட்ட அன்னியச் செலாவணி கையிருப்பு! இறக்குமதி பற்றி கவலையே வேண்டாம்!!

By SG Balan  |  First Published Sep 1, 2024, 5:55 PM IST

ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 681.688 பில்லியன் டாலர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.


இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7.023 பில்லியன் டாலர்கள் அதிகரித்து இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 681.688 பில்லியன் டாலர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தைய அதிகபட்ச கையிருப்பு 674.919 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. சில காலமாகவே இந்தியாவின் அந்தியச் செலாவணி கையிருப்பு ஏறுமுகமாக உள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கூடியிருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த அன்னியச் செலாவணி கையிருப்பு உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உதவியுள்ளது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துக்களில் அதிகபட்சமாக அமெரிக்க டாலர்கள் 5.983 பில்லியன் அளவுக்கு அதிகரித்து 597.552 பில்லியன் டாலர்களாக உள்ளது.

தவறாக விளம்பரம் செய்த சங்கர் ஐஏஎஸ் அகாடமி! ரூ.5 லட்சம் அபராதம் தீட்டிய நீதிமன்றம்!!

கடந்த ஒரு வாரத்தில் தங்கக் கையிருப்பின் மதிப்பு 893 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து, மொத்தம் 60.997 பில்லியன் டாலராகக் கூடியிருக்கிறது. இந்தியாவின் தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு இன்னும் ஒரு வருடத்திற்கான இறக்குமதிகளுக்குப் போதுமானது என்று கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் சுமார் 58 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளன. 2022இல் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிவைக் கண்டது.

அந்நியச் செலாவணி கையிருப்பு என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி அல்லது நாணய ஆணையம் வைத்திருக்கும் சொத்துகள் ஆகும். இதில் பொதுவாக அமெரிக்க டாலர்கள் அதிகமாகவும், யூரோ, ஜப்பானிய யென் மற்றும் பவுண்ட் ஸ்டெர்லிங் ஆகியவை குறைந்த அளவும் இருக்கும்.

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணிச் சந்தைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. அதிகப்படியான ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்கவும் நடவடிக்கைகளை எடுக்கிறது.

மீண்டும் 'எனக்குத் தெரியாது' என்ற ரஜினி! ட்ரெண்டிங்கில் வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

click me!