EPFO higher pension scheme: அதிக பென்சன் பெற தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழிகாட்டு விதிகள்: இபிஎப்ஓ

By Pothy RajFirst Published Feb 21, 2023, 11:53 AM IST
Highlights

தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின்(இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான இபிஎப்ஓ(EPFO) நேற்று வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின்(இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான இபிஎப்ஓ(EPFO) நேற்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வழக்கின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து மண்டல இபிஎப் அலுவலங்களுக்கும் சுற்றறிக்கையை  இபிஎப்ஓ அனுப்பியுள்ளது.

Latest Videos

2014ம் ஆண்டு செப்டம்பர் 1ம்தேதிக்குப் பின் ஓய்வு பெற்றவர்கள், ஏற்கெனவே பணியில் இருக்கும் ஊழியர்கள், ஆகியோரின் ஊதியம் இபிஎஸ் 1995 வரைமுறைக்கு அப்பால் இருந்தாலும், அவர்களும் அதிக ஓய்வூதியத்துக்காக விண்ணப்பிக்கலாம். அதற்கான விதிகள், தேவையான ஆவணங்களையும் இபிஎப் வெளியிட்டுள்ளது.

நிதிஆயோக் சிஇஓ-வாக முன்னாள் வர்த்தகச் செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம் நியமனம்: யார் இவர்?

இதற்கு முன் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்காத, அதேசமயம், தகுதியான நபர்களும் ஓய்வூதியத்துக்காக விண்ணப்பிக்கலாம். இதற்கான காலக்கெடு வரும் மார்ச் 3ம் தேதியோடு முடிகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 2014ம் ஆண்டு தொழிலாளர் பென்சன் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. 

இன் இபிஎஸ் திருத்தம் ஆகஸ்ட் 22, 2014ன்படி,  ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பை ஒரு மாதத்திற்கு ரூ 6,500 லிருந்து ரூ 15,000 ஆக உயர்த்தியது. இபிஎப் உறுப்பினர்கள,் தங்கள் முதலாளிகளுடன் சேர்ந்து அவர்களின் ஊதியத்தில் 8.33 சதவீதத்தை பங்களிக்க அனுமதித்தது.

இதன்படி, இபிஎப்ஓ அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, “ தொழிலாளர்கள், தங்கள் பணியாற்றும் நிறுவனங்களுடன் இணைந்து, ஜாயின்ட் ஆப்ஷன் படிவத்தை தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் இதற்கான வசதி விரைவில் உருவாக்கப்படும். 

அதானி சொத்து 5000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது|30 நாட்களுக்குமுன் 3வது இடம்!இப்போ 25!

மண்டல பிஎப்(ஓய்வூதியம்) ஆணையர் அபராஜிதா ஜாகி கூறுகையில் “ இபிஎஸ் 11(3) பத்தியில் கூறப்பட்டுள்ளபடி தொழிலாளர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களுடன் இணைந்து கூட்டுவிருப்ப படிவத்தை தாக்கல் செய்யாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாக்கல் செய்யலாம். 

இபிஎஸ்-திட்டத்துக்கு பங்களித்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், செப்டம்பர் 1, 2014 க்கு முன் இந்தத் திட்டத்தில் கூட்டுவிருப்ப படிவத்தை அளிக்காதவர்களும் இப்போது உயர் ஓய்வூதியத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓய்வூதிய நிதிக்கு மாற்றுவதற்கும் மற்றும் நிதிக்கு மறு டெபாசிட் செய்வதற்கும் இபிஎப்ஓ அமைப்புக்கு தொழிலாளர்களும், முதலாளியும் கூட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இபிஎப்ஓ இணையதளத்தில் அதிக ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணப்பிக்க தனியாக வசதிவிரைவில் தரப்படும். அவ்வாறு வசதி வரும்போது, ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பதிவு செய்ய வேண்டும், டிஜிட்டல் ரீதியாக லாக்கின் செய்தபின், விண்ணப்பம் சமர்பித்தலுக்கான எண்  வழங்கப்படும்.

அந்தந்த மண்டல பிஎப் அலுவலகத்தில் உள்ள இதற்குரிய அதிகாரி அதிக ஊதியம் மற்றும் கூட்டுவிருப்பம் தாக்கல் செய்திருந்தால் அதை ஆய்வு செய்து, தங்களின் முடிவை, விண்ணப்பதாரர்களுக்கு மின்அஞ்சல் அல்லது தபால் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்புவார்.

ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.16,982 முழுமையாக விடுவிப்பு - நிர்மலா சீதராமன்

விண்ணப்பதாரரிடம் இருந்து ஏதேனும் குறைகள் இருந்தால், கூட்டுவிருப்ப மனு மற்றும் பேமென்ட் நிலுவை இருந்தால், அதை குறைதீர்ப்பு தளத்தில் பதிவு செய்யலாம். 

தேவையான ஆவணங்கள்
1.    இபிஎப் திட்டத்தில் 26(6) படிவ விருப்பச்சான்று
2.    வைப்புச் சான்று
3.    பணியாற்றும் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட விருப்பச்சான்று
4.    ரூ.5ஆயிரம் முதல் ரூ.6500 வரம்புக்கு மேல் ஊதியத்தில் பென்சன் நிதி விருப்பச் சான்று
5.    ஏபிஎப்சி ஆதாரச் சான்று

click me!